Last Updated:
மீன்பிடித் தடைக்காலம் முடிந்த பின்னரும் கடலில் பெரியளவில் மீன்கள் கிடைக்கவில்லை என மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் 61 நாள் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து தற்போது மீனவர்கள் வழக்கம் போல் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு சென்று வருகின்றனர்.
அந்த வகையில் வங்கக் கரையோரம் அமைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்திலும் வழக்கம்போல் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு சென்று வருகின்றனர். மற்ற பகுதிகளைப் போல் இல்லாமல் காலையில் கடலுக்குச் சென்று இரவே கரைக்குத் திரும்புவதால் ஐஸ் இல்லாத ஃப்ரெஷ் மீன்களை தூத்துக்குடி ஃபிஷிங் ஹார்பரில் காணலாம்.
இரவு பிடித்துக்கொண்டு வரும் மீன்கள் இரவே ஏலம் விடப்படுகின்றன. வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் ஏலத்தில் மீன்கள் வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் தடைக்காலம் முடிந்து சில நாட்கள் கடந்தும் மீன்கள் வரத்து அதிகளவில் இல்லை என்றும் காற்று அதிகமாக இருப்பதால் அதிக வகை மீன்கள் தென்படவில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து மீனவர் எபஸ்டின் கூறுகையில், “மே மாதம் தடைக்காலம் முடிந்து கடலுக்குச் செல்வதால் மீன்கள் வரத்து அதிகளவில் காணப்படும் என்றே நினைத்திருந்தோம். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு மீன்கள் வரத்து காணப்படவில்லை. ஏமாற்றமாகவே இருந்தது.
சாளை, பாறை வகைகள், விலை மீன், திருக்கை போன்ற மீன்களும் பாறை வகைகளே அதிகளவில் காணப்படுகின்றன. மற்ற வகை மீன்கள் வரத்து குறைந்தே காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.
Thoothukkudi,Tamil Nadu
June 23, 2025 12:09 PM IST

