Last Updated:
ஈரானில் விமானம் மட்டுமின்றி நீர்மூழ்கி கப்பலில் இருந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈரானின் அணு உலைகளை குறி வைத்து நடத்திய தாக்குதலுக்கு ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் என பெயர் வைத்திருந்ததாக அமெரிக்க கூட்டுப்படை தலைவர் டென் ஜெய்ன் தெரிவித்துள்ளார்.
ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை தாக்க, அமெரிக்காவில் இருந்து 7 B-2 விமானங்கள் சென்றதாகவும், அதன் 18 மணி நேர பயணத்தில் இடையிடையே நடு வானிலேயே எரிபொருள் நிரப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:30 மணிக்கு அமெரிக்க போர்விமானங்கள் ஈரான் வான்பரப்புக்குள் நுழைவதற்கு முன்பாக, அமெரிக்க நீர்மூழ்கி கப்பலில் இருந்து 24-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் இஸ்ஃபஹான் அணுசக்தி நிலையத்தின் மீது ஏவப்பட்டதாக கூறியுள்ளார்.
பின்னர், ஈரான் நேரப்படி நள்ளிரவு 2:10 மணிக்கு விமான தாக்குதல்கள் தொடங்கப்பட்டதாகவும், முதல் குண்டு முதன்மையான அணுசக்தி நிலையமான ஃபோர்டோ மீது போடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஃபோர்டோ மற்றும் நடான்ஸ் அணுசக்தி நிலையங்கள் மீது அடுத்தடுத்து 14 பங்கர் பஸ்டர் வெடிகுண்டுகளை பி-2 விமானங்கள் வீசியதாகவும் கூறியுள்ளார். மேலும் 25 நிமிடங்களில் அனைத்து தாக்குதல்களையும் முடித்துவிட்டு அமெரிக்க விமானங்கள் ஈரான் எல்லையை விட்டு வந்துவிட்டதாகவும் அமெரிக்க கூட்டுப்படை தலைவர் டென் ஜெய்ன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் மிசோரியில் உள்ள தளத்தில் இருந்து இந்த தாக்குதல் திட்டம் தொடங்கியதாகவும், 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பிறகு B2 ரக விமானங்கள் நிகழ்த்திய மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை இது எனவும் கூறியுள்ளார்.
June 23, 2025 7:00 AM IST
B-2 விமானங்கள் மட்டுமல்ல நீர்மூழ்கி கப்பலில் இருந்தும் தாக்குதல்..! அமெரிக்கா சொன்ன தகவல்


