Last Updated:
அமெரிக்கா தாக்குதல் தொடர்பாக ஈரான் அதிபர் மசூதி பெசெஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். ஏமன், சவுதி அரேபியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா நடத்திய தாக்குதல் தொடர்பாக ஈரான் அதிபர் மசூத் பெசெஸ்கியானுடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
45 நிமிட உரையாடலில் ஈரான் மீதான தற்போதைய தாக்குதல் குறித்து கவலை தெரிவித்ததாகவும், தற்போதைய நிலை குறித்து ஈரான் அதிபருடன் விவாதித்ததாகவும் எக்ஸ் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார். பேச்சுவார்த்தை மூலமாகவும், தூதரக அளவிலும் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மற்றொருபுறம் ஈரானுக்கு ஆதரவாக ஏமனும் போரில் குதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டு ராணுவத்தின் எக்ஸ் தள பக்கத்தில், ஏமன் கடல் பரப்பில் இருக்கும் கப்பல்களை உடனடியாக வெளியேறும்படியும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரான் இறையாண்மை மீதான அமெரிக்காவின் தாக்குதலை ஏற்றுக் கொள்ள முடியாது என சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா, சீனா, ஓமன், ஈராக் உள்ளிட்ட நாடுகளும் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. போப் 14ஆம் லியோ, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், போர் தீர்வாக அமையாது என்றும் காயங்களை அதிகப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் உலகுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியா குத்தரெஸ் எச்சரித்துள்ளார்.
June 22, 2025 9:43 PM IST


