இந்திய இளைஞர்களின் அபிலாஷைகளை முழுமை அடைய வைப்பதற்கான ஒரு முயற்சியாக தொடங்கப்படவிருக்கிறது நண்பா. இதனை மலாய் மொழியில் (Program
Nadi Aspirasi Nasional Anak Muda) என்று அழைக்கப்படுகிறது. நண்பா நிகழ்ச்சியின் வழி இந்திய சமுதாயத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இணக்கத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இது தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஜே-கொம் மூலம் உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
இதன் வழி அரசாங்கம் வழங்கும் புதிய வாய்ப்புகள், கொள்கைகள், முயற்சிகள் குறித்த விவரங்களை நம் இளைஞர்களிடையே பகிருவதற்கும் அதே வேளை இன்றைய நவீன காலகட்டத்தில் குறிப்பாக இளையோர் எதிர்நோக்கி வரும் இணையத்தள அச்சுறுத்தல்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.
வரும் 28.6.2025 காலை 8 மணியளவில் லெம்பா பந்தாய், ஐ.டபுள்யூ.கே., எக்கோ பார்க் மெர்பாவ் மண்டபத்தில் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ஃபஹ்மி பட்சில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவிருக்கும் இந்தத் திட்டத்தில் புதையல் வேட்டை, விளக்கக் கூட்டம், வண்ணம் தீட்டும் போட்டி, அதிர்ஷட குலுக்கல், ரஹ்மா மடானி விற்பனை உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நண்பா நிகழ்ச்சி இந்திய சமுதாயத்திற்கு விடிவெள்ளியாக அமையும் என்பதோடு இத்திட்டத்தின் வழி தொழில்திறன், பயிற்சி, ஆரோக்கியம், பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, மலேசிய மடானி குறித்த திட்டங்களை மக்களுக்கு சேர்ப்பதோடு அரசாங்கத்திற்கும் இந்திய சமுதாயத்திற்கும் குறிப்பாக இளையோரை இணைக்கும் ஒரு பாலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




