• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

ஏஜென்டிடம் ஏமாந்து, நிர்கதியாய் நின்ற இந்திய ஊழியர்; “குடும்பத்தை காப்பாற்ற” சிங்கப்பூரில் செல்லப்பிராணி தகனம் செய்யும் வேலை

GenevaTimes by GenevaTimes
June 22, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 2 mins read
0
ஏஜென்டிடம் ஏமாந்து, நிர்கதியாய் நின்ற இந்திய ஊழியர்; “குடும்பத்தை காப்பாற்ற” சிங்கப்பூரில் செல்லப்பிராணி தகனம் செய்யும் வேலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வேலை வாங்கி தரும் ஏஜென்ட்டிடம் பணத்தை இழந்து நிர்கதியாய் நின்ற இந்திய ஊழியர் சிங்கப்பூருக்கு எவ்வாறு வந்தார் அவரின் கனவு வேலை கிடைத்ததா என்பது தான் இந்த பதிவு.

சாதாரண குடும்பத்தில் பிறந்த 32 வயதான மணிமாறன் குணாவுக்கு, ஏஜென்டிடம் பணத்தை இழந்தது பெரும் அடியாக அமைந்தது.

“17 வயதில் எதுவுமில்லாமல் சிங்கப்பூருக்கு வந்தார்”.. இன்று லிட்டில் இந்தியாவின் புகழ்பெற்ற “ஜோதி ஸ்டோர்” – உழைப்பால் உயர்த்த மனிதர்

சிங்கப்பூருக்கு வந்த கதை

தாம் தான் குடும்பத்தின் ஒளி என்பதை விளங்கிய குணா, மீண்டும் ஏஜென்ட் (உரிமம் பெற்ற) மூலம் குறைவான கட்டணம் செலுத்தி சிங்கப்பூருக்கு வந்தார்.

கவர்ச்சிகரமான வேலை கிடைக்கும் என்ற ஆசையில் இருந்த அவருக்கு செல்லப்பிராணிகளை தகனம் செய்யும் வேலை தான் கிடைத்தது.

எதற்கும் தயாராக இருந்த அவர், நேர்மையான வேலையில் ஊதியம் கிடைத்தால் போதும் என்ற மனநிலைக்கு மாறினார்.

செல்லப்பிராணிகளை தகனம் செய்யும் ஊழியராக வேலை செய்வதற்கான எதிர்பாராத அழைப்பையும் அவர் கனத்த இதயத்தோடு ஏற்றுக்கொண்டார்.

கும்பகோணம்

கடந்த ஏழு ஆண்டுகளாக நடமாடும் செல்லப்பிராணி தகன சேவை (Mobile Pet Cremation Services) நிறுவனத்தில் பணிபுரியும் திரு. குணா, இழப்புக்கு ஈடுசெய்யும் விதமாக பணத்தை குடும்பத்துக்கு வழங்கி வருகிறார்.

தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் இருந்து வரும் திரு. குணா, சாதாரண எளிமையான குடும்பத்திலிருந்து வந்தவர். அவர்கள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவரது தந்தை வாடகை வண்டி ஓட்டி வருகிறார், அவரது தாயார் கஷ்டத்தில் பங்குகொள்ள வேண்டும் என்பதற்காக தையல் வேலை செய்து வருகிறார்.

“என்னுடைய சொந்த ஊரில் நல்ல சம்பளத்தில் வேலைகள் இல்லை, என் பெற்றோரையும் தங்கையையும் பராமரிக்க வேண்டியிருந்தது. அதனால்தான் நான் வெளிநாடு செல்ல முடிவு செய்தேன்,” என்று திரு. குணா கூறினார்.

சிங்கப்பூரில் 2026 பொது விடுமுறை நாட்கள் – ஊழியர்களுக்கு MOM வெளியிட்ட முக்கிய குறிப்பு

படிப்பு

பொறியியல் டிப்ளமோ படிப்பை முடித்த திரு. குணா, ஆட்டோமொபைல் நிறுவனத்தில் பயிற்சியாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார்.

ஏஜென்ட் மோசடி

செல்லப்பிராணிகளுக்கு இறுதிச் சடங்குகளை ஏற்பாடு செய்து நிர்வகிக்கும் வேலை கூட அவருக்கு அவ்வளவு எளிதாக கிடைக்கவில்லை.

சிங்கப்பூருக்கு வருவதற்கு முன்னர், வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்த மோசடி ஏஜென்ட்டால் அவர் ஏமாற்றப்பட்டார், திரு. குணாவின் சான்றிதழ்கள் மற்றும் விண்ணப்பத்தை வாங்கிய ஏஜென்ட் அதோடு காணாமல் போனார்.

அப்போது “நான் உதவியற்றவனாக ஏமாற்றப்பட்டனை போல உணர்ந்தேன். என் நம்பிக்கைகள் அனைத்தும் வீணாகிவிட்டதாக நினைத்தேன்,” என திரு. குணா நினைவு கூர்ந்தார்.

மனம் தளரவில்லை

வாழ்க்கையில் சறுக்கல் இருந்தபோதிலும் மனம் உடையாமல், அவரின் நண்பரிடமிருந்து உரிமம் பெற்ற ஏஜென்ட் மூலம் திரு. குணா செல்லப்பிராணிக்கு தகனம் செய்யும் வேலையைப் பெற்றார்.

அதற்காக சுமார் 8,000 ரூபாய் (S$120) ஏஜென்ட் கட்டணத்தை அவர் செலுத்தினார், “நான் அந்த வேலைக்கு போவது குறித்து என் அம்மா மிகவும் அச்சமடைந்தார். அதனை மறுபரிசீலனை செய்யச் சொன்னார். ஆனால் நான் எந்த வேலையாக இருந்தாலும் பார்க்க உறுதியாக இருந்தேன்,” என்று திரு. குணா கூறினார்.

அவர் தற்போது பூனைகள், நாய்கள், செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பன்றிகள், மீன்கள் போன்ற பல செல்லப்பிராணிகளை தகனம் செய்கிறார்.

இதில் பல்வேறு மத நம்பிக்கைகளின் அடிப்படையிலும் இறுதி சடங்கு செய்யப்படும்.

புதிய TOTO Match டிரா அறிமுகம்: “2 எண்கள் பொருந்தினால் டோட்டோ பரிசு” – முழு தொகுப்பு

வேலை குறித்து..

இந்த வேலை குறித்து கூறிய அவர், “இது ஒரு உணர்ச்சிபூர்வமான வேலை, இது எனக்கு பொறுமையைக் கற்றுக் கொடுத்துள்ளது,” என்றார்.

திரு. குணா இயக்கும் தகன உலை 1,000 டிகிரி செல்சியஸைத் தாண்டிய வெப்பநிலையை அடையும் என சொல்லப்படுகிறது, இதற்கு கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் தினசரி பராமரிப்புகள் தேவைப்படும்.

மொழித் தடை

வேலையில் தொழில்நுட்ப மற்றும் உணர்ச்சி ரீதியான அடிப்படைகளை அவர் விரைவாகப் புரிந்துகொண்டாலும், மொழி அவருக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருந்தது. அவரது ஆங்கில புலமை செல்லப்பிராணி உரிமையாளர்களுடன் தொடர்புகொள்வதற்கு சிரமத்தை ஏற்படுத்தியது.

“முதலில், வாடிக்கையாளர்களுடன் பேசுவதில் பதட்டம் இருந்தது. ஆனால் தற்போது வாடிக்கையாளர்களுடன் உரையாடுவது, அவர்கள் பேசுவதை கேட்பது மற்றும் செய்தி அனுப்புவதன் மூலம் அடிப்படை ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.

குணா குறித்து மேலாளர்

நடமாடும் செல்லப்பிராணி தகன சேவைகளின் செயல்பாட்டு மேலாளர் ஆல்வின் சீ (52) திரு. குணா குறித்து கூறுகையில், அவர் பண்பார்ந்த பெரிதும் விரும்பத்தக்க அரிய ரத்தினம் என்று கூறினார்.

வாழ்க்கையில் சாதிக்க துடிக்கும் அனைவருக்கும் திரு. குணாவின் கதை உத்வேகத்தை அளிக்கும் என்று நம்புகிறோம். மீண்டும் மற்றொரு ஊழியரின் சுவாரசிய கதையோடு சந்திப்போம்.

Singapore Jobs: இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்து சிங்கப்பூரில் வேலை பார்க்க முடியுமா?

Read More

Previous Post

அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு தாமதமின்றி பதில் தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை | Makkal Osai

Next Post

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் விவகாரம் ;சோனியா காந்தி வலியுறுத்தல்

Next Post
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் விவகாரம் ;சோனியா காந்தி வலியுறுத்தல்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் விவகாரம் ;சோனியா காந்தி வலியுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin