Last Updated:
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது சம்பந்தமாக அமெரிக்க நாட்டு மக்களுக்கு அதிபர் டெனால்ட் ட்ரம்ப் உரையாற்றினார்.
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது சம்பந்தமாக அமெரிக்க நாட்டு மக்களுக்கு அதிபர் டெனால்ட் ட்ரம்ப் உரையாற்றினார்.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான மோதல் இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு ஈரான் மீது அமெரிக்க நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது. அதன்படி ஈரானில் உள்ள 3 அணு சக்தி நிலையங்கள் மீது அமெரிக்க வான்படை வெற்றிகரமாக தாக்குதல் நடத்திவிட்டு திரும்பியுள்ளது. ஃபோர்டோ, நடான்ஸ், எஸ்பஹான் ஆகிய அணுசக்தி நிலையங்களை தாக்கியுள்ளது. யுரேனியம் செறிவூட்டுவதில் முக்கிய நிலையமான ஃபோர்டோவில் முழுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, ஈரானில் அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் காலை 7:30 மணிக்கு அமெரிக்க நாட்டு மக்களுக்கு அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் உரையாற்ற உள்ளார். ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக டிரம்ப் அறிவித்த நிலையில் உரையாற்றுகிறார். அதன்படி இந்திய நேரப்படி காலை 7:30 மணிக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நேரடி தாக்குதலில் இறங்கியுள்ளதால் உலக அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது சம்பந்தமாக அமெரிக்க நாட்டு மக்களுக்கு அதிபர் டெனால்ட் ட்ரம்ப் பேசுகையில், “அமெரிக்கா ராணுவத்தினர் துல்லியமான தாக்குதலை ஈரானின் அணு ஆயுத நிலைகள் மீது நிகழ்த்தியுள்ளனர். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் இணைந்து திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளோம். ஈரானில் இன்னும் பல இடங்களை குறிவைத்துள்ளோம். ஈரானின் முக்கிய அணு ஆயுத நிலைகளை தாக்கி அழித்துள்ளது. இன்று நாங்கள் செய்ததை உலகின் எந்த ராணுவத்தாலும் செய்ய முடியாது. ஈரான் தாக்குதலால் ஈரான் அடி பணியாவிட்டால் தாக்குதல் மோசமாகும்.” என்று தெரிவித்துள்ளார்.
June 22, 2025 8:03 AM IST


