Last Updated:
2005 முதல் 2014 வரை எம்.எஸ்.தோனி விளையாடிய 90 டெஸ்ட் போட்டிகளில் அவர் 6 சதங்கள் அடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்தார்.
இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெண்டுல்கர் – ஆண்டர்சன் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 134 ரன்கள் விளாசினார்.
இது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட்டின் 7-வது சதமாக அமைந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
2005 முதல் 2014 வரை எம்.எஸ்.தோனி விளையாடிய 90 டெஸ்ட் போட்டிகளில் அவர் 6 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் கடந்த 2018-ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ரிஷப் பண்ட், 43 போட்டிகளில் 7-ஆவது சதத்தை விளாசியுள்ளார்.
முன்னதாக சதம் விளாசிய மகிழ்ச்சியை தனது சிக்னேச்சர் ஸ்டெப்பான பல்டி அடித்து ரிஷப் பண்ட் வெளிப்படுத்தினார். 2022-ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி அதில் இருந்து மீண்டு வந்து கிரிக்கெட் விளையாடி வரும் பண்ட், பழைய ஃபார்முக்கு திரும்பி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 471 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 209 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. போப் 100 ரன்களுடனும், ஹேரி புரூக் 0 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
June 22, 2025 10:07 AM IST


