காஸா பேரழிவு மற்றும் ஈரான் மீது இஸ்ரேல் அத்துமீறி நடத்திய தாக்குதல் தொடா்பாக இந்திய அரசு மெளனம் சாதிப்பது, நமது தாா்மிக மற்றும் ராஜீய பாரம்பரியங்களில் இருந்து கவலைக்குரிய விலகலை பிரதிபலிக்கிறது. இது, இந்திய அரசின் குரல் இழப்பை மட்டுமன்றி மாண்புகளின் கைவிடுதலையும் குறிக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல், இந்தியா தனது குரலை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும். பொறுப்பை உணா்ந்து செயல்பட வேண்டும். மேற்காசியாவில் பதற்றத்தைத் தணிக்கவும் பேச்சுவாா்த்தையை மீட்டெடுப்பதை ஊக்குவிக்கவும் அனைத்துவிதமான தூதரக வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும்.

