• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

'எத்தனை செய்துள்ளேன்; இருந்தும்..!' – நோபல் பரிசுக்காக புலம்பி தீர்க்கும் ட்ரம்ப்

GenevaTimes by GenevaTimes
June 21, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
'எத்தனை செய்துள்ளேன்; இருந்தும்..!' – நோபல் பரிசுக்காக புலம்பி தீர்க்கும் ட்ரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘அமெரிக்காவிற்கும் இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்று பிரதமர் மோடி நேரடியாக போன்காலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு தெரிவித்தும் கூட, அவர் தனது கருத்தில் இருந்து பின்வாங்குவதாக இல்லை.

இந்தப் போன்கால் பேசி முடிந்த அதே நாளில், ட்ரம்ப் மீண்டும், “நான் தான் இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்தேன்” என்று தெரிவித்தார்.

இவர் இதை தொடர்ந்து பதிவு செய்து வருவது, ‘ஒரு வேளை அவருக்கு நோபல் பரிசு ஆசை இருக்குமோ’ என்கிற எண்ணத்தைக் கிளப்பியது.

அசிம் முனீர்
அசிம் முனீர்

அசிம் முனீர் பற்ற வைத்த நெருப்பு!

இந்த எண்ணத்திற்கு வலு சேர்க்கும் விதமாக, ட்ரம்ப் ஒரு செயலை செய்தார். அதாவது அமெரிக்காவிற்கு அரசு பயணம் சென்றிருந்த பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர், “இந்தியா, பாகிஸ்தான் இடையே ட்ரம்ப் மத்தியஸ்தம் செய்து தாக்குதலை நிறுத்தியதற்கு, அவருக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.

அதற்கு பரிசாக, உடனே அவருக்கு வெள்ளை மாளிகையில் மதிய விருந்து வைத்தார் ட்ரம்ப். இதை வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் அன்னா கெல்லியும் உறுதிப்படுத்தியிருந்தார்.

ட்ரம்ப் பதிவு

தற்போது தனக்கு நோபல் பரிசு ஆசை உள்ளது என்பதை மறைமுகமாக தனது சமூக வலைதளப் பக்கத்தின் பதிவு மூலம் ட்ரம்பே உறுதிபடுத்தியிருக்கிறார்.

அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது…

“நான் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ உடன் இணைந்து பல ஆண்டுகளாக காங்கோ மற்றும் ருவாண்டா இடையே நடந்து வந்த போரை நிறுத்தி ஒப்பந்தம் மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளேன். இது பிற போர்களை விட, மிக அதிகமான ரத்தம் மற்றும் இறப்புகளைப் பார்த்தது ஆகும்.

மோடி - ட்ரம்ப்
மோடி – ட்ரம்ப்

ருவாண்டா மற்றும் காங்கோ பிரதிநிதிகள் திங்கட்கிழமை வாஷிங்டன்னிற்கு வந்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்கள். இது ஆப்பிரிக்கா மற்றும் உலக நாடுகளுக்கு மிக சிறந்த தினம் ஆகும். ஆனால், இதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதற்கு, செர்பியா, கொசோவோ இடையிலான போரை நிறுத்தியதற்கு, எகிப்து மற்றும் எத்தியோப்பியா போர் நிறுத்தம், மத்திய கிழக்காசியாவில் நான் மேற்கொள்ள வைத்த ஆபிரகாம் ஒப்பந்தத்திற்கு என எதற்கும் எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.

ரஷ்யா, உக்ரைன் போர் நிறுத்தம், இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தம் என நான் எது செய்தாலுமே எனக்கு நோபல் பரிசு கிடைக்காது. ஆனால், நான் என்ன செய்கிறேன் என்று மக்களுக்குத் தெரியும். அதுவே எனக்கு போதும்” என்று புலம்பி தீர்த்திருக்கிறார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு நோபல் பரிசு தரலாமா… வேண்டாமா? – உங்கள் கருத்து என்ன?

( @realDonaldTrump – Truth Social Post )
( Donald J. Trump – Jun 20, 2025, 5:58 PM ET )

I am very happy to report that I have arranged, along with Secretary of State Marco Rubio, a wonderful Treaty between the Democratic Republic of the Congo, and the Republic of Rwanda, in… pic.twitter.com/60ubZAx7Fz

— Donald J. Trump TRUTH POSTS (@TruthTrumpPosts) June 20, 2025



Read More

Previous Post

கர்நாடகாவில் போலி செய்திகளை பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை: விரைவில் புதிய சட்டம் அமலுக்கு வருகிறது | 7 years in jail for spreading fake news in Karnataka

Next Post

KETAHUI PENSTRUKTURAN TARIF ELEKTRIK | Makkal Osai

Next Post
KETAHUI PENSTRUKTURAN TARIF ELEKTRIK | Makkal Osai

KETAHUI PENSTRUKTURAN TARIF ELEKTRIK | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin