பதுளை – துங்ஹிந்த பகுதியில் சுற்றுலா பேருந்தொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
குறித்த விபத்து இன்றைய தினம் (21.06.2025) சம்பவித்துள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் விபத்தில் காயமடைந்த 26 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர் .
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

