“மறுபுறம் இஸ்ரேலும் இந்தியாவும் சமீபத்திய ஆண்டுகளில் நல்ல உறவுகளை வளர்த்துள்ளன.
இந்த தனித்துவமான சூழல், நம் நாட்டுக்கு பதற்றத்தைத் தணிக்கவும் அமைதியை உருவாக்கும் பாலமாக செயல்படவும் தார்மீக பொறுப்பை வழங்குகிறது.
இது வெறுமனே ஒரு சுருக்கமான கொள்கை அல்ல. பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் மேற்கு ஆசியாவில் வசித்தும் பணியாற்றியும் வருகிறார்கள், இதனால் அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டியது நமது தேசிய நலனுக்கான பிரச்னையாகிறது.” என்று எழுதியுள்ளார் சோனியா காந்தி.
இந்தியாவின் கொள்கையை மோடி அரசு கைவிட்டுவிட்டது!
இஸ்ரேல் மீது 2023, அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலை காங்கிரஸ் சந்தேகத்துக்கிடமின்றி கண்டித்தாலும் பாலஸ்தீனத்தில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேலின் கொடூரங்களைக் கண்டு நாம் மௌனமாக இருக்க முடியாது எனக் கூறியுள்ளார் சோனியா காந்தி.
இந்த மனிதாபிமான பேரழிவு நடைபெற்றுக்கொடிருக்கும்போது, இஸ்ரேலுக்கு அருகில் பரஸ்பர கண்ணியத்துடன் சுதந்திர பாலஸ்தீனம் வாழ்வதை ஊக்கப்படுத்தும் அமைதியான இரு-நாட்டு தீர்வுக்கான இந்தியாவின் நீண்டகால கொள்கை ரீதியான பற்றுதலை நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் கைவிட்டுவிட்டது எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

