ஆன்லைனில் செலவு செய்வதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு கிரெடிட் கார்டு கேஷ்பேக், டிஸ்கவுண்ட் மற்றும் சில சமயங்களில் இலவச சப்ஸ்கிரிப்ஷன்களை கூட வழங்குகிறது. ஒருவேளை நீங்கள் புத்திசாலித்தனமாக செலவு செய்பவர் என்றால் சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்வது ஒவ்வொரு வருடமும் உங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் பணத்தை சேமித்துக் கொடுக்கும்.
ஆன்லைன் ஷாப்பிங் செய்வதற்கு கிரெடிட் கார்டு ஏன் சிறந்ததாக அமைகிறது?
- ஆன்லைன் டிரான்ஸாக்ஷன்கள் செய்வதற்கு அதிக அளவு கேஷ்பேக் அல்லது ரிவார்டு பாயிண்டுகள் கிடைக்கும்.
- பிரத்யேகமாக இலவச அல்லது சலுகை விலையில் OTT சப்ஸ்கிரிப்ஷன்கள் கிடைக்கும்.
- கார்டு வாங்குவதற்கு மற்றும் ஆண்டுவாரியான கட்டணமும் குறைவாக இருக்கும்.
ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் OTT சப்ஸ்கிரிப்ஷன்கள் செய்வதற்காகவே ஒரு கிரெடிட் கார்டை தேர்வு செய்வது எப்படி?
குறைவான ஆண்டுவாரியான கட்டணம்:
ஒரு குறிப்பிட்ட அளவு தொகையை அந்த குறிப்பிட்ட வருடத்தில் நீங்கள் செலவு செய்யும்போது எந்தவிதமான ஆண்டுவாரியான கட்டணம் அல்லது குறைவான கட்டணத்தை வசூல் செய்யும் பல்வேறு சிறந்த கிரெடிட் கார்டுகள் உள்ளன. Amazon Pay ICICI கார்டுக்கு ஆண்டுவாரியான கட்டணம் கிடையாது மற்றும் அமேசானில் நீங்கள் செய்யும் பேமெண்ட்களுக்கு 5% ரிவார்டு பாயிண்டுகள் கிடைக்கும்.
பல்வேறு அப்ளிகேஷன்களுடன் பிரத்யேகமான கூட்டணி:
பல வங்கிகள் ஸ்விக்கி, புக் மை ஷோ அல்லது மேக் மை ட்ரிப் போன்ற குறிப்பிட்ட பிளாட்ஃபார்ம்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தங்களுடைய கார்டு மூலமாக செய்யப்படும் பேமெண்ட்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகின்றனர். உதாரணமாக, ICICI Coral கார்டானது புக் மை ஷோ மூலமாக மூவி டிக்கெட்டுகளை புக் செய்வதற்கு பை ஒன் கெட் ஒன் ஆஃபர்களை வழங்குகிறது.
அதிக கேஷ்பேக் அல்லது ரிவார்டு பாயிண்டுகள்:
பல்வேறு இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்கள், ஃபுட் டெலிவரி அப்ளிகேஷன்கள் மற்றும் டிஜிட்டல் வாலட்டுகளில் பல கிரெடிட் கார்டுகள் இப்போது 5 முதல் 10 சதவீத கேஷ்பேக்கை வழங்குகின்றனர்.
OTT பிளாட்ஃபார்ம்களில் டிஸ்கவுண்டுகள்:
சில கிரெடிட் கார்டுகள் OTT சப்ஸ்கிரிப்ஷன்களை ரினிவல் செய்வதற்கு சலுகைகள் அல்லது புதிதாக சப்ஸ்கிரைப் செய்பவர்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்டுகளை வழங்குகின்றன.
ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்வதற்கு சில டிப்ஸ்:
- குறிப்பிட்ட ஒரே ஒரு பிளாட்ஃபார்மில் நீங்கள் அளவுக்கு அதிகமாக ஷாப்பிங் செய்வீர்கள் என்றால் அந்த வெப்சைட்டுக்கு அதிகபட்ச பலன்கள் தரும் ஒரு கார்டை தேர்வு செய்யுங்கள்.
- பல்வேறு அப்ளிகேஷன்களை பயன்படுத்தும் நபர்கள் கேஷ்பேக் அல்லது ரிவார்டு பாயிண்டுகள் வழங்கும் கார்டுகளை தேர்வு செய்யலாம்.
- OTT பிளாட்ஃபார்ம்களை தினமும் பயன்படுத்துபவர்கள் அதற்கான சப்ஸ்கிரிப்ஷன்களுக்கு சலுகைகள் வழங்கும் கார்டுகளை பெற வேண்டும்.
ஆன்லைனில் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க தேவையான டாக்குமெண்ட்கள் என்னென்ன?
- PAN கார்டு மற்றும் ஆதார் அட்டை
- வருமான சான்றிதழ் (சேலரி ஸ்லிப் அல்லது இன்கம் டேக்ஸ் ரிட்டன்)
- சமீபத்திய புகைப்படம் (பாஸ்போர்ட் சைஸ்)
- நல்ல கடன் வரலாறு
- இதற்கான அங்கீகாரம் என்பது 24 மணி நேரம் முதல் இருந்து ஒரு சில நாட்கள் வரை குறிப்பிட்ட அந்த வங்கியைப் பொறுத்து அமையலாம்.
முன்னதாக கிரெடிட் கார்டுகள் கடன்களுக்கான முதன்மையான ஒரு பொருளாதார கருவியாக இருந்து வந்தது. ஆனால், இப்போது உங்களுடைய சேமிப்புகளை அதிகப்படுத்துவதற்கு, ரிவார்டுகள் மற்றும் கேஷ்பேக் பெறுவதற்கு மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கு உதவும் ஸ்மார்டான கருவிகளாக மாறிவிட்டன. உங்களுடைய தேவைக்கு தகுந்தாற்போல சரியான கிரெடிட் கார்டை தேர்வு செய்து பயன்படுத்தி பலன் அடையுங்கள்.
June 21, 2025 12:37 PM IST
அடிக்கடி ஆன்லைன் ஷாப்பிங் பண்றவங்களா நீங்க…? அதிக டிஸ்கவுன்ட் வேணும்னா இந்த கிரெடிட் கார்டுதான் பெஸ்ட்…!

