Last Updated:
உபியில் ஷகீல் தனது 15 வயது மகனுக்காக பேசி முடித்த பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு, 17 கிராம் தங்கம் மற்றும் ரூ.,2 லட்சம் ரொக்கத்தை எடுத்து ஓடி விட்டார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவுகள் என்பது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்று அனைவரும் அறிந்ததே. அந்த உறவுகள் தவறாக மாறும் போது அது தான் சமூகத்தில் கள்ளக்காதலாக பேசப்படுகிறது. அந்த வரிசையில் உபியில் தற்போது நடந்த சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
உபியை சேர்ந்த ஷகீல் என்ற நபருக்கு ஷபனா என்ற மனைவியும், 6 குழந்தைகளும் உள்ளது. குடும்பமாக மகிழ்ச்சியாக வசித்து வந்து கொண்டிருந்த நிலையில், திடீரென ஷகீல் தனது 15 வயது மகனுக்கு திருமணம் நிச்சயிக்கிறார். ஆனால் மைனர் மகனுக்கு மேஜரான பெண்ணை திருமணம் செய்து வைக்க முற்பட்டார். ஆனால் அவரின் திட்டமோ மகனுக்கு திருமணம் செய்து வைப்பதில்லை என்று அவரது குடும்பத்தாருக்கு போகபோக தான் தெரிந்தது.
மகனுக்காக பேசி முடித்த பெண்ணிடம் தினமும் உரையாடி கடலை போட்டு, உறவை வளர்த்து வந்தார் ஷகீல். ஒரு கட்டத்திற்கு மேல் இந்த கதை கள்ளக்காதலாக மாறியது. அடிக்கடி தொலைப்பேசியில் பேசி வருவதை கண்ட ஷகீலின் மனைவி ஷபனா சந்தேகத்து மகனிடம் இது குறித்து கூறினார். பிறகு இருவரும் சேர்ந்து அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி நேரடியாக சென்று விசாரித்தனர்.
விசாரணையில் இருவரும் காதலித்து வருவது நிரூபனமானது. உண்மையை மனைவி தெரிந்து கொண்டதை நினைத்து ஆத்திரமடைந்த ஷகீல், மனைவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்திற்கு மேல் எவ்வளவு நாள் தொலைப்பேசியிலேயே உரையாடுவது என நினைத்த ஷகீல், வீட்டில் இருந்த 17 கிராம் தங்கம் மற்றும் ரூ.,2 லட்சம் ரொக்கத்தை எடுத்து கொண்டு மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடனே ஓடி விட்டார். இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையில் களமிறங்கியுள்ளனர். தனது தாத்தா, பாட்டி தான் தந்தையின் காதலுக்கும், திருமணத்திற்கும் உடந்தை என 15 வயது மகன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனை கேட்டு குழம்பி போன போலீசார், ஷகீலை தேடி வருகின்றனர்.
இதே போன்று தான் ஏப்ரல் மாதம், உத்தரபிரதேசத்தில் ஒரு பெண் தனது வருங்கால மருமகனுடன் ஓடிப்போன சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. தற்போது மருமகளுடன் மாமனார் ஓடி போன சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
June 21, 2025 11:57 AM IST


