• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இன்று சர்வதேச யோகா தினம்: 3 லட்சம் பேர் பங்கேற்கும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி: பிரதமர் மோடி பங்கேற்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 21, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
இன்று சர்வதேச யோகா தினம்: 3 லட்சம் பேர் பங்கேற்கும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி: பிரதமர் மோடி பங்கேற்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விசாகப்பட்டினம்,பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் உடல் நலன் குறித்து பேசி வருகிறார். அப்படி, 2014ம் ஆண்டு ஐ.நா சபையில் உரையாற்றிய பிரதமர் மோடி, யோகாவின் நன்மைகளையும் பெருமையையும் எடுத்துக்கூறி அதனை சர்வதேச தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என பரிந்துரைத்தார். இதற்கு 177 உறுப்பு நாடுகள் ஆதரவு அளத்த நிலையில், 2015ம் ஆண்டு முதல் ஜூன் 21 ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஐ. நா சபை அறிவித்தது.

சுமார் 200 நாடுகளில் யோகா பயிற்சியை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். அன்றாட வாழ்வில் யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் உடல் மற்றும் மனத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும், இந்த பண்டைய நடைமுறையை உலகெங்கிலும் உள்ள மக்கள் ஏற்று கொள்ள ஊக்குவிப்பதே சர்வதேச யோகா தினம் நோக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில் 11வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாப்படுகிறது. இதையொட்டி ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ என்ற கருப்பொருளில் உலகில் உள்ள 191 நாடுகளில் யோகா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்தியாவிலும் அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பெருந்திரளாக பங்கேற்கும் வகையில் யோகா பயிற்சிக்கான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 8 லட்சம் இடங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த யோகா நிகழ்ச்சியை மிகப்பிரமாண்டமாக நடத்துவதற்கு, ஆந்திர மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும், விசாகப்பட்டினத்தில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே. கடற்கரையில் இருந்து போகபுரம் வரை உள்ள 26 கி.மீ நீள நடைபாதை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறுகையில், “சர்வதேச யோகா தினத்தையொட்டி, மாநிலம் முழுவதும் இன்று யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தாலும், கின்னஸ் சாதனை படைக்கும் வகையில் விசாகப்பட்டினத்தில் மிகப்பிரமாண்ட யோகா நிகழ்ச்சி நடத்துகிறோம். ஆர்.கே. கடற்கரையில் காலை 6:30 மணி முதல் காலை 8 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பங்கேற்க உள்ளனர்.

25 ஆயிரம் பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று, 108 நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்வார்கள். ஒரே நேரத்தில் மிகப்பெரிய குழு மற்றும் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்யும் சாதனையை படைப்பதே இதன் நோக்கம். சிறப்பாக நடைபெறும் இந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்ய இருக்கிறார்.

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் மக்கள் பங்கேற்பதற்கு வசதியாக 326 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் தலா 1,000 பேர் பங்கேற்று பயிற்சியில் ஈடுபடலாம். அவர்களுக்காக 3.32 லட்சம் டி-சர்ட்கள், 5 லட்சம் யோகா பாய்களும் தயார் செய்யப்பட்டுள்ளன. பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகமானால் அதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது” என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியை அமைதியாகவும், சிறப்பாகவும் நடத்துவது குறுத்து, ஆந்திர மாநில போலீஸ் டி.ஜி.பி. ஹரிஷ்குமார் குப்தா கூறுகையில், “யோகா ஆர்வலர்கள் அனைவரும் காலை 6 மணி முதல் 6:30 மணிக்குள் தங்கள் இடங்களுக்குச் செல்ல வேண்டும். விசாகப்பட்டினத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

யோகா பயிற்சி நடைபெறும் பகுதியை கண்காணிக்கும் பணியில் 1,200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், டிரோன்கள் ஈடுபடும். மேலும் பாதுகாப்பு பணியில் சுமார் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுவார்கள். பிரதமர் மோடி, முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பதால் பல அடுக்கு பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.



Read More

Previous Post

ஈரானிலிருந்து 290 இந்திய மாணவர்கள் டெல்லியில் தரையிறங்கினர்; 1000 பேரை அழைத்துவர ஏற்பாடு! | 290 Indian students land in Delhi from Iran Arrangements to bring back 1000 more

Next Post

பிரித்தானியாவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சட்டம் – ஐபிசி தமிழ்

Next Post
பிரித்தானியாவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சட்டம் – ஐபிசி தமிழ்

பிரித்தானியாவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய சட்டம் - ஐபிசி தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin