மக்கள் தரும் உத்வேகம்
இருப்பினும், ஒவ்வொரு முறையும் மாவட்டங்களுக்குச் சென்று மக்களை, அதாவது “என் தம்பிகள், என் தங்கைகள், அண்ணன்மார்கள், தாய்மார்கள்” ஆகியோரைச் சந்திக்கும் நேரத்திலே, அவர்கள் தனக்குக் கொடுக்கின்ற உற்சாகம் தன்னை மேலும் மேலும் உறுதிப்படுத்தி, இன்னும் அதிகமாக வேலை செய்ய வேண்டும் என்று ஊக்குவிப்பதாகவும், நம்பிக்கையை அளிப்பதாகவும் அவர் கூறினார். தன்னைப் போன்று கோடான கோடி சொந்தங்கள் இருக்கின்றார்கள் என்பதும், அதுவே தன்னை அடுத்த கட்டத்துக்குச் செல்ல வைப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

