இஸ்ரேல் ஈரான் இடையே தொடர்ந்து வரும் போரில், இஸ்ரேலுடன் அமெரிக்கா இணைந்து கொள்வது குறித்த செய்திகள் வெளியாகியிருக்கிறது. இது தொடரபாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், “இஸ்ரேல்-ஈரான் மோதலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை அடுத்த இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முடிவு செய்வார்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.
அதே நேரம் ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் ரஷ்யா, ஈரானின் புஷேர் அணுமின் நிலையத்தைத் தாக்குவதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்துள்ளது. அதனால் இந்தப் போரின் தீவிரம் நாளுநாள் கூடிக்கொண்டே செல்கிறது.
இந்தப் போரை தொடர்ந்து நேற்று இஸ்ரேலுக்கான நார்வே தூதரின் வீட்டின் மீது ஒரு கையெறி குண்டு வீசப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது தொடர்பாக பேசிய இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார், “இஸ்ரேலுக்கான நார்வே தூதர் பெர் எகில் செல்வாக் உடன் பேசினேன், அவரது வீட்டு முற்றத்தில் இன்று மாலை ஒரு கையெறி குண்டு வீசப்பட்டது.

