• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானுக்கு ஆயுதம் அனுப்பிய சீனா-துருக்கி நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடியடி

GenevaTimes by GenevaTimes
June 20, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானுக்கு ஆயுதம் அனுப்பிய சீனா-துருக்கி நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடியடி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈரானுக்கு (Iran) ஆயுதங்களை உற்பத்தி செய்ய உதவும் சீனா (China) மற்றும் துருக்கி (Turkey) உள்ளிட்ட பல நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இஸ்ரேல் (Israel) – ஈரான் போர் இரண்டாவது வாரத்தில் கால்வைத்துள்ள நிலையில், ஈரானின் இஸ்லாமிக் புரட்சி பாதுகாப்புப் படைக்கு இரட்டை பயன்பாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் ஆயுதத் திட்டங்களுக்கான இயந்திரங்களை வழங்கியதற்காக சீனா, ஹொங்ஹொங், துருக்கி, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.



இது தொடர்பில் அமெரிக்க பொருளாதாரத் துறை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

கடத்த முயற்சி



இதனடிப்படையில், Rayan Roshd Afzar Company (RRA) மற்றும் Towse Sanaye Nim Resanaye Tarashe ஆகிய இரு நிறுவனங்களுக்காக கப்பல்களில் அனுப்பப்பட்ட உயர் தொழிநுட்ப உபகரணங்களை மறைக்க பல முன்னணி நிறுவனங்கள் தவறான கப்பல் ஆவணங்களைப் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஈரானுக்கு ஆயுதம் அனுப்பிய சீனா-துருக்கி நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடியடி | Us Sanctions Countries That Help Iran

SHUN KAI XING என்ற பனாமா கொடி ஏந்திய bulk carrier கப்பலை, ஹொங்ஹொங் நாட்டைச் சேர்ந்த Unico Shipping Co Ltd இயக்கியது.



இந்த கப்பல் சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ள ஈரான் நிறுவனங்களுக்கு அனுமதியின்றி தொழில்நுட்பப் பொருட்கள் கடத்த முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

போலியான தகவல்

சிங்கப்பூரின் V-Shipping Pte Ltd மற்றும் சீனாவின் Shenzhen Xinxin Shipping Co Ltd ஆகியன இந்தச் சரக்குகளை ஒழுங்கமைத்ததுடன், இறுதி வாடிக்கையாளர்களை மறைக்கும் வகையில் ஆவணங்களைத் திருத்தியுள்ளன.

ஈரானுக்கு ஆயுதம் அனுப்பிய சீனா-துருக்கி நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடியடி | Us Sanctions Countries That Help Iran



அத்தோடு, துருக்கி நிறுவனமான Edisa Dis Ticaret Ltd, கடைசி பெறுநரை மறைக்க முயற்சி செய்ததாகவும் சீன நாட்டு கப்பல் மேல் அதிகாரி போலியான தகவல்களை சமர்ப்பித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.


அமெரிக்க நிதித் துறை துணைச் செயலாளர், “ஈரானின் ஆயுதத் திட்டங்களை ஆதரிக்கும் எந்த முயற்சியும் பொறுப்பேற்கச் செய்யப்படும்” என கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

மகளை பாலியல் செயல்களில் ஈடுபட அழைத்தவருக்கு சிறையும் பிரம்படியும் – Malaysiakini

Next Post

ஜூன் 22 இல் தில்லியில் கன மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

Next Post
ஜூன் 22 இல் தில்லியில் கன மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

ஜூன் 22 இல் தில்லியில் கன மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin