Last Updated:
இன்டெல் நிறுவனம் வர்த்தக வளார்ச்சி மற்றும் மறுகட்டமைப்பு காரணமாக 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல் ஜூலை மாதம் 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வர்த்தக வளார்ச்சி மற்றும் நிறுவன மறுகட்டமைப்பு உள்ளிட்ட காரணங்களால் மொத்தம் உள்ள ஊழியர்களில் 15 முதல் 20 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்ய இன்டெல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள 10 இடங்களில் இருக்கும் 15 சிப் உற்பத்தி ஆலைகளில் பணியாற்றும் ஊழியர்களையும் பணிநீக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் இன்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக லிப் பு டன் ( Lip-Bu Tan) பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், ஏப்ரல் மாதம் பணி நீக்கம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
இன்டெல் நிறுவனத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேர் பணியாற்றும் நிலையில், இதுவரை இல்லாத வகையில் தற்போது 10 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. செயற்கை தொழில்நுட்பத்தின் ஆதிக்கம், புதிய கண்டுபிடிப்புகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் தொடர்ச்சியாக இன்டெல் நிறுவனம் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறது.
2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இன்டெல் நிறுவனம் 821 மில்லியன் டாலர் வருவாய் இழப்பை எதிர்கொண்ட நிலையில் ஆட்குறைப்பு நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
June 20, 2025 9:10 PM IST
821 மில்லியன் டாலர் வருவாய் இழப்பு.. 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்க செய்ய இன்டெல் நிறுவனம் திட்டம்!


