Last Updated:
கர்நாடக அரசு ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
ஆர்சிபி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட நிலையில் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய சட்டத்தை கொண்டுவர கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முதன்முறையாக கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிக்கொண்டாட்டம் ஜூன் 4ம் தேதி பெங்களூருவில் நடைபெற்றது. அங்கு லட்சக்கணக்கனோர் கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உரிய ஏற்பாடுகள் இன்றி கூட்டத்தை கூட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய சட்டத்தை கொண்டுவர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை அல்லது 5 ஆயிரம்ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வணிக ரீதியாக விளையாட்டு, சர்கஸ் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துபவர்கள் உரிய முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் நிகழ்வுகளளை நடத்தினாலோ, அந்த நிகழ்வில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள், யாருக்கேனும் காயம் ஏற்பட்டாலோ ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் மீதே நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளுது. இந்த சட்டம் விரைவில் கர்நாடக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
Bangalore,Karnataka
June 20, 2025 9:21 PM IST
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்… கர்நாடக அரசு அதிரடி திட்டம்.. மீறினால் என்ன தண்டனை தெரியுமா?


