Last Updated:
அஞ்சலி, ரூ.2,000 கோடி மதிப்புடைய மருந்து நிறுவனமான ‘என்கோர் ஹெல்த்கேர் ப்ரைவேட் லிமிடெட்’-இல் இயக்குநராக இருக்கிறார்.
அழகு, அறிவு, தொழில் திறமை என சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவராக விளங்கும் அஞ்சலி மெர்ச்சண்ட், ரூ.2,000 கோடி மதிப்புள்ள என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநராக வணிக உலகில் தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறார்.
என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் இயக்குநர் அஞ்சலி மெர்ச்சண்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறார். பாலிவுட் நடிகைக்கு உண்டான தோற்றமும், வணிக உலகில் இவரது சாதனைகளும் அவரது வலுவான திறமையையும், தனித்துவமான செல்வாக்கையும் சுட்டிக் காட்டுகின்றன. அஞ்சலி, ரூ.2,000 கோடி மதிப்புடைய மருந்து நிறுவனமான ‘என்கோர் ஹெல்த்கேர் ப்ரைவேட் லிமிடெட்’-இல் இயக்குநராக இருக்கிறார்.
இதுதவிர, அஞ்சலிக்கு மிகச் சிறந்த கல்வி பின்னணியும் உள்ளது. மும்பையின் தி கதிட்ரல் & ஜான் கானன் ஸ்கூல் மற்றும் இகோல் மாண்டியோல் வேர்டு ஸ்கூல் ஆகியவற்றில் படித்த இவர், அமெரிக்காவின் பாப்சன் கல்லூரியில் அண்டர்பிரினர்ஷிப் அண்ட் ஸ்ட்ராடஜிக் மேனேஜ்மெண்ட் துறையில் பட்டம் பெற்றார். மேலும், உலகின் முன்னணி வணிகக் கல்வி நிறுவனமான லண்டன் பிசினஸ் ஸ்கூலில் எம்பிஏ-வையும் முடித்தார்.
2020-ல், ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான வாட்டலி (Vataly)-இன் நிறுவனரான அமன் மஜிதியாவை அஞ்சலி திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அமன் மஜிதியாவும், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இணை இயக்குநராக உள்ளார். வணிக அனுபவத்திலும், தொழில்முனைவோர் முயற்சிகளிலும் அஞ்சலிக்கு தனி தடம் உள்ளது. 2012-ல் சந்தைப்படுத்தல் மேலாளராக தொடங்கிய இவரது பணி, பிறகு வணிக மேம்பாட்டு துறையில் பொது மேலாளராக பணியாற்றிய அனுபவம் வரை அவரது வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
இதுதவிர, அழகு மற்றும் கூந்தல் பராமரிப்பு பிராண்டான டிரியாப்க்ஸ் (Triaffx)-ஐ நடத்திய பின்னர், தற்போது மைலூன் மெட்டல்ஸ் (Myloons Metals)-இல் செயல் இயக்குநராகவும் உள்ளார். அஞ்சலி குடும்பத்தின் நிகர மதிப்பு ரூ.900 கோடிக்கு மேல் என மதிப்பீடு செய்யப்படுகிறது. அவரது தந்தை ரூ.755 கோடி நிகர மதிப்புடையவராகவும், தாயார் ரூ.10 கோடி நிகர மதிப்புடையவராகவும் உள்ளனர். இவ்வாறாக, அழகு சாதனப் பிராண்டின் தொடக்கம் முதல் உற்பத்தி துறை ரீதியான பங்குகள் வரை பல துறைகளில் தடம் பதித்துள்ள அஞ்சலி, அழகு, அறிவு மற்றும் தொழில் திறமை இவற்றின் கலவையால் இந்திய வணிக உலகிலும், சமூக ஊடகங்களிலும் கவனம் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
June 20, 2025 4:34 PM IST
ரூ.2,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்துக்கு அதிபதி.. ரூ.900 கோடிக்கு மேல் குடும்ப சொத்து.. யார் இந்த அஞ்சலி மெர்ச்சண்ட்?


