• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மொத்த பாகிஸ்தான், சீனாவின் பெரும்பாலான பகுதிகளை தாக்கி அழிக்கும்.. புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!

GenevaTimes by GenevaTimes
June 20, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
மொத்த பாகிஸ்தான், சீனாவின் பெரும்பாலான பகுதிகளை தாக்கி அழிக்கும்.. புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 20, 2025 8:40 AM IST

மேக் 8 வேகத்தில் பறக்கும் இந்த ஏவுகணை, பாகிஸ்தான் முழுவதையும் மற்றும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளையும் இலக்காக்கக் கூடியது.

News18News18
News18

இந்தியா உருவாக்கும் புதிய ஹைப்பர்சோனிக் ஸ்டெல்த் ஏவுகணை, பாகிஸ்தான் முழுவதையும் மற்றும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளையும் தாக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது எதிரி ரேடார் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தடுக்கும் திறனுடன், இந்தியாவின் உள்நாட்டு ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தில் முக்கியமான மைல்கல்லாக இருக்கும்.

இந்தியா விரைவில் நீட்டிக்கப்பட்ட பாதை மற்றும் நீண்ட காலத் திறன் கொண்ட ஹைப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணை ET-LDHCM-ஐ சோதிக்க உள்ளது. மணிக்கு 11,000 கிமீ வேகத்தில் பறந்து எதிரியின் இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய சக்தி கொண்ட இந்த ஏவுகணை, 1,500 கிமீ வரம்புக்குள் உள்ள எதிரி இலக்குகளை அழிக்கும். ஸ்க்ராம்ஜெட் இயந்திரம் மற்றும் ஸ்டெல்த் தொழில்நுட்பத்துடன் கூடிய இந்த ஏவுகணை, எதிரியின் வான் பாதுகாப்பு அமைப்புகளையும், ரேடார் கண்காணிப்புகளையும் ஏமாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) தலைமையில், ப்ராஜெக்ட் விஷ்ணுவின் கீழ், ‘தன்னம்பிக்கை கொண்ட இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்படுகிறது. மேக் 8 வேகத்தில் பறக்கும் இந்த ஏவுகணை, பாகிஸ்தான் முழுவதையும் மற்றும் சீனாவின் பெரும்பாலான பகுதிகளையும் இலக்காக்கக் கூடியது. இதன் முக்கியமான அம்சம் என்னவென்றால், போர் நேரத்தில் இந்திய போர் விமானங்கள் எதிரி நாட்டு எல்லைகளுக்குச் செல்வதை தவிர்த்து, பஞ்சாப் அல்லது டெல்லியின் வான் பரப்பில் சுகோய் அல்லது ரஃபேல் விமானங்களில் பறந்து கொண்டே இதை ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணை குறைந்த உயரத்தில், நேராக இல்லாமல் வளைந்த பாதையில் பயணிக்கும் அம்சத்தையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக, எதிரி ரேடாரால் இதை கண்காணிக்க முடிவதில்லை. அணு மற்றும் அணு அல்லாத ஆயுதங்களை ஏந்தும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, 1,000 முதல் 2,000 கிலோகிராம் வரையிலான போர்முனைகளை சுமந்து செல்லக் கூடியது. இந்த மெகா திட்டத்தை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO), ஹைதராபாத்தில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஏவுகணை வளாகத்தில், தனியார் தொழில்துறை பங்குதாரர்களுடன் இணைந்து உருவாக்கி வருகிறது. இது இந்தியாவின் பாதுகாப்புத் துறையின் முக்கிய சாதனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறாக, இந்தியாவின் ET-LDHCM ஹைப்பர்சோனிக் ஸ்டெல்த் ஏவுகணை, உள்நாட்டு அறிவியல் நுட்பத்தின் அடையாளமாகவும், எதிரியின் பாதுகாப்பு அமைப்புகளை சுலபமாக தாண்டும் எதிர்பார்ப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளது. மேக் 8 வேகத்திலும், 1500 கி.மீ. தூரத்திலும் இலக்குகளை தாக்கும் இந்த ஏவுகணை, இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகவும் கருதப்படுகிறது. இது எதிர்கால போர்த் திட்டங்களில் இந்தியாவுக்கு ஒரு வலுவான பாதுகாப்பு அம்சமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

June 20, 2025 8:40 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

மொத்த பாகிஸ்தான், சீனாவின் பெரும்பாலான பகுதிகளை தாக்கி அழிக்கும்.. புதிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிக்கும் இந்தியா!

Read More

Previous Post

அஜித்தின் அடுத்த படத்தில் இணையும் சூப்பர் ஸ்டார்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து!

Next Post

மாநில கூடைப்பந்து போட்டி: சென்னையில் நாளை தொடக்கம் | State basketball tournament begins in Chennai tomorrow

Next Post
மாநில கூடைப்பந்து போட்டி: சென்னையில் நாளை தொடக்கம் | State basketball tournament begins in Chennai tomorrow

மாநில கூடைப்பந்து போட்டி: சென்னையில் நாளை தொடக்கம் | State basketball tournament begins in Chennai tomorrow

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin