• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியா – பாக். போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை: முதல்முறையாக ஒப்புக்கொண்ட ட்ரம்ப் – பின்னணி என்ன? | Trump says two leaders of India, Pakistan decided to stop conflict

GenevaTimes by GenevaTimes
June 19, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இந்தியா – பாக். போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த பங்கும் இல்லை: முதல்முறையாக ஒப்புக்கொண்ட ட்ரம்ப் – பின்னணி என்ன? | Trump says two leaders of India, Pakistan decided to stop conflict
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாஷிங்டன்: ‘இந்​தியா – பாகிஸ்​தான் இடையி​லான போர் நிறுத்​தத்​துக்கு நான்​தான் காரணம்’ என்று தொடர்ந்து கூறிவந்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், முதல்​முறை​யாக ‘இரு நாட்டு தலை​வர்​களே போர் நிறுத்​தத்​துக்கு காரணம். இதில் அமெரிக்கா​வுக்கு எந்த பங்​கும் இல்​லை’ என்று உறு​திபட தெரி​வித்​துள்​ளார். இந்தியாவின் கருத்தை பிரதமர் மோடி தெரிவித்ததை தொடர்ந்து, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

காஷ்மீரின் பஹல்​காம் பகு​தி​யில் கடந்த ஏப்​ரல் 22-ம் தேதி தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர். இதில் 26 சுற்​றுலா பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்த தாக்​குதலுக்கு பதிலடி​யாக பாகிஸ்​தானில் உள்ள தீவிர​வாத முகாம்​கள் மீது ஆபரேஷன் சிந்​தூர் என்ற பெயரில் இந்​திய ராணுவம் மே 7-ம் தேதி துல்​லிய தாக்​குதல் நடத்​தி​யது. இதையடுத்​து, இந்​தியா மீது பாகிஸ்​தான் ராணுவம் ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தி​யது. இதை இந்​தியா முறியடித்​தது. இருதரப்​புக்​கும் இடையே நடை​பெற்ற சண்டை மே 10-ம் தேதி முடிவுக்கு வந்​தது.

இதுகுறித்து இந்​திய வெளி​யுறவு துறை செயலர் விக்​ரம் மிஸ்ரி அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தார். ஆனால், அதற்கு முன்​பாக, ‘அமெரிக்​கா​வின் மத்​தி​யஸ்​தத்​தில் இரவு முழு​வதும் நடை​பெற்ற நீண்ட பேச்​சு​வார்த்​தைக்கு பிறகு இந்​தியா – பாகிஸ்​தான் முழு​மை​யான, உடனடி​யான போர்​நிறுத்​தத்​துக்கு ஒப்​புக்​கொண்​டுள்​ளன’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலை​தளத்​தில் பதி​விட்​டார். இது இந்​தி​யா​வில் கடும் விமர்​சனங்​களை ஏற்​படுத்​தி​யது. இதன்பிறகும், இந்​தி​யா-​பாகிஸ்​தான் இடையே போர் நிறுத்​தம் ஏற்பட நான்​தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து பலமுறை கூறி வந்​தார். இதை மறுத்த இந்​தி​யா, ‘பாகிஸ்​தான் கேட்​டுக் கொண்​டதன் பேரில்​தான் போர் நிறுத்​தம் ஏற்​பட்​டது’ என கூறியது.

இந்​நிலை​யில், கனடா​வில் நடை​பெற்ற ஜி7 உச்சி மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி கடந்த 17-ம் தேதி பங்​கேற்​றார். இதில் பிரதமர் மோடி​யும், ட்ரம்​பும் தனி​யாக சந்​தித்து பேச திட்​ட​மிட்​டிருந்​தனர். ஆனால், இந்த மாநாட்​டில் 16-ம் தேதி பங்​கேற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஒரு நாள் முன்​ன​தாகவே நாடு திரும்​பி​விட்​டார். இதனால் இரு தலை​வர்​களும் நேரில் சந்​திக்க முடிய​வில்​லை. இதையடுத்து இரு​வரும் தொலைபேசி​யில் சுமார் 35 நிமிடங்​கள் பேசினர். அப்​போது, இந்​தியா – பாகிஸ்​தான் போர் நிறுத்​தம் தொடர்​பாக இந்​தியா தரப்பு கருத்​துகளை அமெரிக்க அதிபர் ட்ரம்​பிடம் பிரதமர் மோடி திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​துள்​ளார்.

‘‘இந்​தி​யா​வின் ஆபரேஷன் சிந்​தூர் நடவடிக்கை மிக​வும் துல்​லிய​மானது. பஹல்​காம் தீவிர​வாத தாக்​குதலுடன் தொடர்​புடைய பாகிஸ்​தான் மற்​றும் ஆக்​கிரமிப்பு காஷ்மீர் பகு​தி​யில் இருந்த தீவிர​வாத முகாம்​கள் மீது மட்​டும்​தான் இந்​தியா தாக்​குதல் நடத்​தி​யது. பாகிஸ்​தான் கேட்​டுக் கொண்​டதன் அடிப்​படை​யில்​தான் போரை இந்​தியா நிறுத்​தி​யது. இதுதொடர்​பாக இருதரப்பு ராணுவ​மும் நேரடி​யாக பேச்​சு​வார்த்தை நடத்தி உடன்​பாடு எட்​டப்​பட்​டது. இந்த போர்​நிறுத்​தத்​தில் அமெரிக்கா​வுக்கு எந்த பங்​கும் இல்​லை. இரு நாடு​களுக்கு இடையி​லான விவ​காரத்​தில் மூன்​றாம் தரப்பு மத்​தி​யஸ்​தம் செய்​வதை இந்​தியா ஒரு​போதும் ஏற்​காது” என்று அதிபர் ட்ரம்​பிடம் பிரதமர் மோடி உறு​திபட தெரி​வித்​து​விட்​ட​தாக மத்​திய வெளி​யுறவு துறை செயலர் விக்​ரம் மிஸ்ரி தெரி​வித்​தார்.

இந்த சூழ்​நிலை​யில், அமெரிக்கா சென்​றுள்ள பாகிஸ்​தான் ராணுவ தளபதி பீல்டு மார்​ஷல் அசிம் முனீர், அதிபர் ட்ரம்பை சந்​தித்​துப் பேசி​னார். வெள்ளை மாளி​கை​யில் அவருக்கு விருந்து அளிக்​கப்​பட்​டது. இந்த சந்​திப்​புக்​குப் பிறகு ட்ரம்ப் செய்​தி​யாளர்​களை சந்​தித்​தார். அப்​போது ஈரான், இஸ்​ரேல் போர் மற்​றும் இந்​தி​யா​ உட​னான போர் நிறுத்​தம் குறித்த கேள்வி​களுக்கு ட்ரம்ப் கூறிய​தாவது: பாகிஸ்​தான் ராணுவ தளப​திக்கு ஈரான் விவ​காரம் பற்றி நன்​றாகத் தெரி​யும். இஸ்​ரேல், ஈரான் போர் பற்றி அவர் மகிழ்ச்​சி​யடைய​வில்​லை. பாகிஸ்​தான் இஸ்​ரேலுக்கு எதி​ரான நாடு அல்ல. அவர்​கள் இரு நாட்​டை​யும்

உண்​மை​யில் நன்கு அறி​வார்​கள்.

எனினும், அவர்​கள் ஈரானை நன்கு அறிந்​திருக்​கலாம். என்ன நடக்​கிறது என்​பதை அவர்​கள் பார்க்​கிறார்​கள். அவர் (முனிர்) என்​ கருத்​துடன் உடன்​படு​கிறார். இந்​தியா உடனான போரை தொட​ராமல் பாகிஸ்​தான் அதை முடிவுக்கு கொண்​டு​வந்​துள்​ளது. இதற்​காக நன்றி சொல்​வதற்​காகத்​தான் பாகிஸ்​தான் ராணுவ தளபதி அசிம் முனிர் உடனான சந்​திப்பு தற்​போது நடந்​துள்​ளது. போர்​நிறுத்​தம் ஏற்​ப​டா​விட்​டால், அது ஒரு அணுசக்தி போராக இருந்​திருக்​கலாம். இரண்டு நாடு​களும் பெரிய அணுசக்​தி​கள். ஆனாலும் போரை நிறுத்த அவர்​கள் முடிவு செய்​தார்​கள். இரண்டு புத்​தி​சாலிகள் போரை தொடர வேண்​டாம் என முடிவு செய்​தார்​கள். அதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்​தியா மற்​றும் பாகிஸ்​தானுடன் வர்த்தக ஒப்​பந்​தம் மேற்​கொள்ள நாங்​கள் பணி​யாற்றி வரு​கிறோம்.இவ்​வாறு ட்ரம்ப் கூறி​னார்.

‘‘இந்​தியா – பாகிஸ்​தான் போரை நிறுத்​தி​யது நான்​தான்’’ என்று ட்ரம்ப் தொடர்ச்​சி​யாக பலமுறை கூறிவந்த நிலை​யில், முதல்​முறை​யாக போர்​நிறுத்​தத்​துக்கு இரு நாடு​களின் தலை​வர்​கள்​ மட்​டுமே காரணம்​. அதில்​, அமெரிக்கா​வுக்​கு எந்​த பங்​கும்​ இல்​லை என்​று கருத்​து தெரிவித்​திருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.



Read More

Previous Post

ஹனிட்ராப் மோசடியில் ஈடுபட்ட இன்ஸ்டா செலிபிரிட்டி.. 10 மாதங்களுக்கு பிறகு சிக்கியது எப்படி?

Next Post

ஈப்போ ‘வெடிப்பு’: குவாரி நடவடிக்ககள் காரணம் அல்ல  காவல்துறை விசாரணையைத் தொடர்கிறது

Next Post
ஈப்போ ‘வெடிப்பு’: குவாரி நடவடிக்ககள் காரணம் அல்ல  காவல்துறை விசாரணையைத் தொடர்கிறது

ஈப்போ ‘வெடிப்பு’: குவாரி நடவடிக்ககள் காரணம் அல்ல  காவல்துறை விசாரணையைத் தொடர்கிறது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin