இதுதொடர்பாக குளூசெஸ்டர்ஷையர் கிரிக்கெட், தனது எக்ஸ் பக்கத்தில் அசாதாரண குறுக்கீட்டை உறுதிப்படுத்தி, “சூரியன் ஆட்டத்தை நிறுத்தியது. மழைக்கு பதிலாக, பேட்ஸ்மேன்களின் கண்களில் சூரிய ஒளி தாக்குதல் நடத்தியது. வீரர்களின் பாதுகாப்புக்காக, இரு அணிகளும் மைதானத்தை விட்டு வெளியேறிவிட்டன. ஸ்கோர் 29/0 [3.2] ஆக உள்ளது.” என பதிவிட்டது.

