Last Updated:
RuPay என்பது கிரெடிட் கார்டு பயன்படுத்தி டிரான்ஸாக்ஷன்கள் செய்வதற்கு ஒரு பாதுகாப்பான பிளாட்ஃபார்மாக அமைகிறது.
RuPay கிரெடிட் கார்டுகள் தற்போது அதிக அளவில் பிரபலமடைந்து வரும் இந்த சூழ்நிலையில் சிறந்த கார்டுகளை தேர்வு செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக அமைகிறது. RuPay என்பது கிரெடிட் கார்டு பயன்படுத்தி டிரான்ஸாக்ஷன்கள் செய்வதற்கு ஒரு பாதுகாப்பான பிளாட்ஃபார்மாக அமைகிறது.
இதன் காரணமாகவே மில்லியன் கணக்கான யூசர்கள் இதனை ஒரு நம்பகமான ஆப்ஷனாக தேர்வு செய்கின்றனர். RuPay கிரெடிட் கார்டுகளை இன்னும் சிறப்பானதாக மாற்றக்கூடிய விஷயம் என்னவென்றால் பல கார்டுகள் ஆண்டுவாரியான கட்டணங்கள் இல்லாமல் கிடைக்கின்றன. கேஷ்பேக், ரிவார்டுகள் முதல் இலவசமான ஏர்போர்ட் தங்கும் வசதி வரை இந்த கார்டுகள் நமக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கின்றன.
இந்தியாவின் கட்டணமில்லாத சிறந்த RuPay கிரெடிட் கார்டுகள்:
ஆக்சிஸ் வங்கி MY Zone RuPay கிரெடிட் கார்டு:
- இந்த கார்டை வாங்குவதற்கு மற்றும் புதுப்பிப்பதற்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது.
- மாதத்திற்கு இரண்டு முறை 500 ரூபாய் அல்லது அதற்கும் அதிகமான ஸ்விக்கி ஆர்டர்களுக்கு 120 ரூபாய் ஆஃபர்.
- கடந்த 3 மாதங்களில் 50,000 ரூபாய் செலவு செய்து இருந்தால் ஒரு வருடத்திற்கு 4 இலவச உள்ளூர் விமான லவுஞ்ச் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
- குறிப்பிட்ட சில பிரிவுகளில் நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு 200 ரூபாய்க்கும் 4 EDGE REWARD பாயிண்டுகள் வழங்கப்படும்.
ஆக்சிஸ் Fibe RuPay கிரெடிட் கார்டு:
- இந்த கார்டை வாங்குவதற்கு மற்றும் ஆண்டுவாரியான கட்டணம் எதுவும் கிடையாது.
- ஆன்லைன் ஃபுட் டெலிவரி, பொழுதுபோக்கு மற்றும் உள்ளூர் போக்குவரத்து பேமெண்ட்டுகளுக்கு 3% கேஷ்பேக்
- பிற அனைத்து தகுதி பெறும் பேமெண்ட்டுகளுக்கு 1% கேஷ்பேக்
- எரிபொருட்களுக்கு செய்யும் பேமெண்ட்டுகளுக்கு மாதத்திற்கு அதிகபட்சம் 400 ரூபாய் வரை 1% விலக்குஒரு வருடத்திற்கு 4 இலவச உள்ளூர் விமான லவுஞ்ச் அனுமதி
- EazyDiner மூலமாக ஆர்டர் செய்யும் ரெஸ்டாரண்டுகளில் 500 ரூபாய் வரை ஆஃபர்
Edge CSB பேங்க் RuPay கிரெடிட் கார்டு:
- UPI மூலமாக செலவு செய்யும் யூசர்களுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கார்டு.
- இந்த கார்டு பெறுவதற்கு மற்றும் ஆண்டுவாரியான கட்டணம் எதுவும் கிடையாது.
- ஜூபிடர் அப்ளிகேஷன் மூலமாக செலவு செய்யும் UPI பேமெண்ட்டுகளுக்கு 5% கேஷ்பேக்
- கார்டு பயன்படுத்தி செய்யும் டிரான்ஸாக்ஷன்களுக்கு 1% கேஷ்பேக்
- ஒரு மாதத்தில் 30,000 ரூபாய்க்கும் (UPI + கிரெடிட் கார்டு) அதிகமாக செலவு செய்வதற்கு 1% போனஸ் கேஷ்பேக்
- எரிபொருட்களுக்கு ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 100 ரூபாய் வரை 1% கட்டண விலக்கு
Kotak Metro Cash & Carry RuPay கிரெடிட் கார்டு:
- இந்த கார்டை வாங்குவதற்கு மற்றும் ஆண்டுவாரியான கட்டணம் எதுவும் கிடையாது.
- வட்டி இல்லா கடன் கால அவகாசம் 48 நாட்கள் வரை கிடைக்கிறது.
- உங்களுடைய செலவைப் பொறுத்து ஒரு மாதத்தில் 10,000 ரூபாய் வரை கேஷ்பேக் அல்லது ஆன்லைன் மூலமாக கடனை திருப்பி செலுத்தலாம்.
Bank of Baroda Professional Series கிரெடிட் கார்டுகள்:
- ICMAI, ICAI மற்றும் ICSI போன்ற தொழில்முறை நிறுவனங்களை சேர்ந்த உறுப்பினர்களுக்காகவே BOBCARD வடிவமைக்கப்பட்டுள்ளது.
- ஆண்டுவாரியான கட்டணம் அல்லது கார்டை பெறுவதற்கான கட்டணம் கிடையாது.
- கார்டு கிடைத்த 30 நாட்களுக்குள் பயன்படுத்துவதற்கு 1000 ரிவார்டு பாயிண்டுகள் வழங்கப்படும்.
- 3 மாதங்களில் ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக செலவு செய்வதற்கு 4000 போனஸ் பாயிண்டுகள்
- டைனிங், ஆன்லைன் மற்றும் யூட்டிலிட்டி பேமெண்ட்டுகளுக்கு ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 5 ரிவார்டு பாயிண்டுகள்
- ஒரு ரிவார்டு பாயிண்ட்டை 0.25 ரூபாய்க்கு ரீடீம் செய்து கொள்ளலாம்.
- ஒரு வருடத்திற்கு 12 இலவச உள்ளூர் விமான லவுஞ்ச் அனுமதி.
- ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான இன்சூரன்ஸ் காப்பீடு
- 6 மாத இலவச FITPASS Pro மெம்பர்ஷிப்
PNB Platinum RuPay கிரெடிட் கார்டு:
- ஆண்டுவாரியான கட்டணமோ அல்லது கார்டு வாங்குவதற்கான கட்டணமோ கிடையாது.
- கார்டை முதன்முதலில் பயன்படுத்துவதற்கு 300 + ரிவார்டு பாயிண்டுகள்
- யூட்டிலிட்டி பில்கள், ரெஸ்டாரண்டுகள் மற்றும் பலவற்றிற்கு கேஷ்பேக் ஆஃபர்கள்
- 24/7 மணிநேர வரவேற்பு சேவைகள்
PNB Select RuPay கிரெடிட் கார்டு:
- இந்த கார்டுக்கு ஆண்டுவாரியான கட்டணம் கிடையாது.
- ரீடெய்ல் கடைகளில் செய்யும் பேமெண்ட்டுகளுக்கு 2X ரிவார்டு பாயிண்டுகள்
- இலவச உள்ளூர் மற்றும் சர்வதேச விமான நிலைய லவுஞ்ச் வசதி
- யூட்டிலிட்டி மற்றும் ரெஸ்டாரண்டுகளில் செய்யும் பேமெண்ட்டுகளுக்கு பிரத்தியேகமான கேஷ்பேக்.
June 19, 2025 3:20 PM IST


