சிங்கப்பூர்: 2025ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிறுவனமாக “கத்தார் ஏர்வேஸ்” (Qatar Airways) நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
2வது இடத்தை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமான நிறுவனம் பிடித்துள்ளது.
லாரி மோதி வெளிநாட்டவர் மரணம் – இந்திய ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
உலகின் சிறந்த கேபின் குழு மற்றும் ஆசியாவின் சிறந்த விமான நிறுவனமாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தேர்வாகியுள்ளது.
இந்த 2025 ஆண்டுக்கான ஸ்கைட்ராக்ஸ் உலகின் சிறந்த விமான நிறுவன விருது (Skytrax World Airline Awards) வழங்கும் நிகழ்வில் சிறந்த சேவைகளை வழங்கும் விமான நிறுவனங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
விமானப் போக்குவரத்து உலகின் “ஆஸ்கார் விருதுகள்” என்று அழைக்கப்படும் இந்த விருதுகளின் கடந்த 26 ஆண்டுகால வரலாற்றில் கத்தார் ஏர்வேஸ் முதலிடத்தைப் பிடிப்பது இது ஒன்பதாவது முறையாகும்.
உலகின் சிறந்த விமான நிறுவனம் என்ற விருதை ஐந்து முறை வென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், இந்த ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
1993 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கத்தார் ஏர்வேஸ், மத்திய கிழக்கு நாடுகளின் சிறந்த விமான நிறுவனம் என்றும், மேலும் உலகின் சிறந்த Business Class மற்றும் சிறந்த Business Class Airline Lounge ஆகிய விருதுகளையும் வென்றது.
இந்த கணக்கெடுப்பில் மொத்தம் 325க்கும் மேற்பட்ட விமான நிறுவனங்கள் இடம்பெற்றன.
சாங்கி விமான நிலையத்தில் திருடிய இந்தியருக்குச் சிறை… இன்னொருவருக்கு அபராதம்
2025 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த 10 விமான நிறுவனங்கள்
- கத்தார் ஏர்வேஸ்
- சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
- கேத்தே பசிபிக்
- எமிரேட்ஸ்
- ANA ஆல் நிப்பான் ஏர்வேஸ்
- துர்கிஷ் ஏர்லைன்ஸ்
- கொரியன் ஏர்
- ஏர் பிரான்ஸ்
- ஜப்பான் ஏர்லைன்ஸ்
- ஹைனான் ஏர்லைன்ஸ்
2025ன் உலகின் சிறந்த குறைந்த கட்டண (Low-Cost) விமான நிறுவனங்கள்
- ஏர் ஆசியா
- ஸ்கூட் (Scoot)
- இண்டிகோ
சிங்கப்பூரில் 2026 பொது விடுமுறை நாட்கள் – ஊழியர்களுக்கு MOM வெளியிட்ட முக்கிய குறிப்பு

