சிங்கப்பூரில் உரிமம் இல்லாமல் லாரியை ஓட்டிய இந்திய ஓட்டுநர், வெளிநாட்டவர் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்தினார்.
லாரியை கேட்டில் மோதியதில், சுவரின் ஒரு பகுதி இடிந்து அது இரண்டு பாதசாரிகள் மீது விழுந்தது, அதில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் 2024 ஆம் ஆண்டு மே மாதம் துவாஸ் சவுத் அவென்யூ 4 க்கு அருகிலுள்ள டெக் பார்க் கிரசென்ட்டில் உள்ள நுழைவாயிலில் நடந்தது.
சாங்கி விமான நிலையத்தில் திருடிய இந்தியருக்குச் சிறை… இன்னொருவருக்கு அபராதம்
இன்னொருவருக்கு பலத்த காயம்
இந்த சம்பவத்தில் இன்னொரு பாதசாரிக்கு பலத்த காயம் ஏற்பட்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன. மேலும் அவர் குறித்த விவரங்களை அது வெளியிடவில்லை.
சம்பவத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் 24 வயதான இந்தியர் அசோகன் சந்தோஷ்சிவம் மீது நேற்று (ஜூன் 18) நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கவனமில்லாமல் லாரியை ஓட்டியதாக குற்றச்சாட்டு
உரிய கவனமின்றி லாரியை ஓட்டியது, இதன் விளைவாக 34 வயதுடைய இரு மியான்மர் நாட்டவருக்கு விபத்தை ஏற்படுத்தியது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளும் அவற்றில் அடங்கும்.
மேலும், உரிமம் இல்லாமல் லாரியை ஓட்டியதாகவும் அசோகன் மீது குற்றம் சாட்டப்பட்டது.
துவாஸில் லாரி கவிழ்ந்து விபத்து (Video): ஊழியர்கள் 6 பேர் மருத்துவமனையில் அனுமதி
அதாவது, வாகனத்தை பின்னோக்கி ஓட்டியபோது முறையாக கண்காணிக்க தவறியதாகவும், இதன் காரணமாக லாரி அருகிலுள்ள கேட்டில் மோதியதாகவும் அசோகன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் மாதம் அசோகன் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தண்டனை என்ன?
உரிய கவனமின்றி வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றம் நிரூபணமானால் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது S$10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
சிங்கப்பூர் டோட்டோ (TOTO) டிரா: S$10 மில்லியன் ஜாக்பாட் பரிசு – ஒரே வெற்றி! ஓகோன்னு வாழ்க..!

