Last Updated:
ஹெச்.ஐ.வி. நோய் பரவாமல் இருக்க தற்போது மாத்திரைகள், கருத்தடை உறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவில் ஆண்டுக்கு இருமுறை செலுத்தி கொள்ளக் கூடிய ஹெச்.ஐ.வி. தடுப்பு மருந்துக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஹெச்.ஐ.வி. நோய் பரவாமல் இருக்க தற்போது மாத்திரைகள், கருத்தடை உறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், அவை ஹெச்.ஐ.வி. நோய் வராமல் இருப்பதற்கு 100 சதவிகிதம் உத்தரவாதம் அளிக்க முடியாது.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கிலியட் சயின்ஸ் என்ற ஆய்வகத்தில், லெனாகாபவிர் (Lenacapavir) என்ற ஹெச்.ஐ.வி.க்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். ஆண்டுக்கு இரண்டு முறை செலுத்தக்கூடிய இந்த மருந்துக்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மருந்தின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.2,100-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் உற்பத்தியை அதிகரித்த வலியுறுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டுமே பயன்பாட்டிற்கு வரும் இந்த மருந்து, விரைவில் உலகம் முழுவதும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகில் ஹெச்.ஐ.வி.-க்கான முதல் தடுப்பு மருந்தாக லெனாகாபவிர் கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
June 19, 2025 12:23 PM IST
HIV-க்கு தடுப்பு மருந்து – அமெரிக்காவில் அனுமதி அளித்து அரசு உத்தரவு..! இந்திய மதிப்பில் எவ்வளவு ரூபாய் தெரியுமா?


