மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்கிழமை(ஜூன் 19) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.
காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் என பல தரப்பினரும் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

