• Login
Monday, April 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2026-ம் ஆண்டு டி20 மகளிர் உலகக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் ஜூன் 14-ல் மோதல் | 2026 T20 Women s World Cup India Pakistan clash on June 14

GenevaTimes by GenevaTimes
June 19, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
2026-ம் ஆண்டு டி20 மகளிர் உலகக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் ஜூன் 14-ல் மோதல் | 2026 T20 Women s World Cup India Pakistan clash on June 14
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


துபாய்: ஐசிசி டி 20 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான அட்டவணையை ஐசிசி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இணைந்து நேற்று வெளியிட்டன. மொத்தம் 12 அணிகள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோத உள்ளன. 24 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் மொத்தம் 33 ஆட்டங்கள் இங்கிலாந்தின் 7 மைதானங்களில் நடைபெற உள்ளன.

இந்த 12 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் 1-ல் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா, கடந்த முறை 2-வது இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் 2 தகுதி சுற்று அணிகள் இடம் பெற்றுள்ளன.

குரூப் 2-ல் நடப்பு சாம்பியனான நியூஸிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், இலங்கை, இங்கிலாந்து மற்றும் 2 தகுதி சுற்று அணிகள் இடம் பெற்றுள்ளன. லீக் ஆட்டங்களின் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

அரை இறுதி ஆட்டங்கள் தி ஓவல் மைதானத்தில் ஜூன் 30 மற்றும் ஜூலை 2-ம் தேதி நடைபெறுகின்றன. சாம்பியன் பட்டம் வெல்வது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஜூலை 5-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜூன் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்துகிறது. ஹாம்ப்ஷயர் பவுல், ஹெடிங்லி, ஓல்ட் டிராஃபோர்டு, தி ஓவல், பிரிஸ்டல் கவுண்டி மைதானம் மற்றும் லார்ட்ஸ் ஆகியவை போட்டி நடைபெறும் மற்ற மைதானங்கள் ஆகும்.

இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் ஜூன் 17-ம் தேதி தகுதி சுற்று அணியுடனும், 21-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடனும், 25-ம் தேதி தகுதி சுற்று அணியுடனும், 28-ம் தேதி ஆஸ்திரேலியாவுடனும் மோதுகிறது.



Read More

Previous Post

11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிறை

Next Post

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி | Vikas engine test successful at Mahendragiri ISRO centre

Next Post
மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி | Vikas engine test successful at Mahendragiri ISRO centre

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் விகாஸ் இன்ஜின் சோதனை வெற்றி | Vikas engine test successful at Mahendragiri ISRO centre

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin