Last Updated:
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா செல்ல இருந்த Axiom-4 விண்வெளி பயணம், வானிலை மாற்றம் மற்றும் வீரர்களின் உடல்நிலை காரணமாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்திய விண்வெளி வீரர், சுபான்ஷு சுக்லா செல்ல இருந்த Axiom-4 என்ற விண்வெளி பயணம் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த விண்வெளி வீரரான சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு, ஆக்சியம் 4 என்ற திட்டத்தின் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டது.
கடந்த மே 29 ஆம் தேதி இவர்கள் செல்ல இருந்த பயணம், திடீரென கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 8 மற்றும் 10 ஆம் தேதிகளிலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அடுத்தடுத்து திட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
4 ஆவது முறையாக வியாழக்கிழமை ஆக்சியம் 4 குழு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது. எனினும் வானிலை மாற்றம் மற்றும் வீரர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு திட்டம் மீண்டும் வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
June 18, 2025 6:58 PM IST


