ஹைதராபாத்திலுள்ள பேகம்பேட் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அது போலியானது என உறுதியாகியுள்ளது.
பேகம்பேட் விமான நிலையத்தின் வளாகத்தினுள் வெடிகுண்டு பொறுத்தப்பட்டுள்ளதாக, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்னஞ்சல் மூலம் இன்று (ஜூன் 18) மிரட்டல் விடுத்துள்ளனர். இதையடுத்து, விமான நிலையத்தின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஹைதராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள அந்த விமான நிலையத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், அங்கு தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர்.

