Last Updated:
தி ராக் என்று அழைக்கப்படும் டுவைன் ஜான்சன், ஜான் சீனா, ரேண்டி ஆர்டன், ரோமன் ரெயின்ஸ், ரே மிஸ்டீரியோ ஆகியோரும் 90’ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர்கள்.
WWE என்று சொன்னால், நமக்கு முதலில் நினைவுக்கு வருவது அண்டர்டேக்கர் தான். அவரது உயரம் மற்றும் மிரட்டலான நடை மூலம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். மேலும், அண்டர்டேக்கருக்கு 7 உயிர் என்று 90’ஸ் கிட்ஸ் கூறுவார்கள். இதுபோன்று, WWE என்றதும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று நினைவுக்கு வரும். அதேபோன்று, தி ராக் என்று அழைக்கப்படும் டுவைன் ஜான்சன், ஜான் சீனா, ரேண்டி ஆர்டன், ரோமன் ரெயின்ஸ், ரே மிஸ்டீரியோ ஆகியோரும் 90’ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமானவர்கள். தற்போதும் WWE-க்குத் தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. இதற்கிடையில், வயது வித்தியாசம் அதிகமுள்ள 5 WWE மல்யுத்த ஜோடிகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
Brock Lesnar மற்றும் Sable:
WWE பார்ப்பவர்களுக்கு Brock Lesnar மற்றும் Sable பற்றி தெரிந்திருக்கும். 1996 ஆம் ஆண்டு WWE-யில் அறிமுகமான Sable, 2004 ஆம் ஆண்டு மார்க் மெரோ என்பவரை விவாகரத்து செய்தார். ஆனால், அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெறுவதற்கு முன்பே லெஸ்னரை டேட்டிங் செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இருவரும் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இடையே 10 வயது வித்தியாசம் உள்ளது.
தி அண்டர்டேக்கர் மற்றும் மிஷேல் மெக்கூல்:
இவர்கள் இருவரும் WWE-யில் பிரபலமானவர்கள். மேலும், WWE-யின் ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்றுள்ளனர். தி அண்டர்டேக்கர் தனது கடைசிப் போட்டியாக ரெஸில்மேனியா 36-ல் போட்டியிட்டார். இவர்கள் இருவரும் 2010-ல் திருமணம் செய்து கொண்டனர். ஒரு குழந்தை உள்ளது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தபோது, மிஷேலுக்கு 30, அண்டர்டேக்கருக்கு 45 வயது. சுமார் 15 ஆண்டுகள் வித்தியாசம். மிஷேல் 2011-ல் WWE-யில் இருந்து ஓய்வு பெற்றார்.
கர்ட் ஆங்கிள் மற்றும் ஜியோவானா:
ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற கர்ட் ஆங்கிள், தொழில்முறை மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் நடிகை ஜியோவானா யனோட்டியைத் திருமணம் செய்து கொண்டார். அவர் அவரைவிட 18 வயது இளையவர். அவர்கள் 2009-ல் எண்ட் கேம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துக் கொண்டனர். இதையடுத்து 2012-ல் திருமணம் செய்து கொண்டனர்.
ஜெர்ரி லாலர் மற்றும் லாரின் மெக்பிரைட்:
ஜெர்ரி மூன்று முறை திருமணம் செய்துள்ளார். இவர், 2011-ல், லாரின் மெக்பிரைடுடன் நீண்டகாலமாக உறவில் இருந்தார். ஆனால், இருவரும் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவில்லை. லாரின், ஜெர்ரியைவிட 39 வயது இளையவர்.
பிரெட் ஹார்ட் மற்றும் ஸ்டெஃபனி வாஷிங்டன்:
மல்யுத்த வீரர் பிரெட் “தி ஹிட்மேன்” ஹார்ட் மிகவும் பிரபலமானவர். 1970-களில் ஹார்ட் மல்யுத்தத்தைத் தொடங்கியபோது, அவரது தற்போதைய மனைவி ஸ்டெஃபனி வாஷிங்டன் பிறக்கவே இல்லை. பிரெட் WWE-யில் இன்டர்காண்டினென்டல் சாம்பியன்ஷிப்பை வென்றபோது ஸ்டெஃபனி ஒரு குழந்தையாக இருந்தார். இவர் 2010-ல் ஸ்டெஃபனியை மணந்தார். இந்த ஜோடிக்கு 26 வயது வித்தியாசம் உள்ளது.
June 18, 2025 3:05 PM IST


