“இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலில் அமெரிக்கா உடனான வர்த்தகத்தைக் காட்டி “நான் தான்’ மத்தியஸ்தம் செய்து வைத்தேன்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
இப்போது நடந்துகொண்டிருக்கும் இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் பதிவில், “இந்தியா, பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தியது போல…” என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இது இந்திய அரசுக்கு மிகுந்த நெருக்கடியை தந்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ட்ரம்பின் இந்தக் கூற்று குறித்து மத்திய அரசிடம் கேள்விகளை எழுப்பி வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசியுள்ளார்…
“ஜி7 உச்சி மாநாட்டின் போது, பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்துகொள்வதாக இருந்தது. ஆனால், ட்ரம்ப் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு சீக்கிரம் கிளம்பியதால், இந்தச் சந்திப்பு நிகழவில்லை.
இந்தியா, பாகிஸ்தான் இடையே அமெரிக்கா மத்தியஸ்தமா?
ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று, இரு தலைவர்களும் இன்று தொலைப்பேசியில் பேசினார்கள். இந்தப் போன்காலில் ட்ரம்பிடம் மோடி, முழு சம்பவத்தின் போதும், இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எந்த மட்டத்திலும் பேசப்படவில்லை மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தை அமெரிக்கா செய்யவில்லை என்று தெளிவாக கூறினார்.

