Last Updated:
Iran-US Conflict | அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கையை தொடர்ந்து, ஈரான் உச்ச தலைவர் கமேனி போர் தொடங்கியதாக அறிவித்துள்ளார். இஸ்ரேல்-ஈரான் சண்டை தீவிரமடைந்துள்ளது.
ஈரான் உச்ச தலைவர் கமேனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்த நிலையில், போர் தொடங்கி விட்டதாக கமேனி அறிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் இடையிலான சண்டை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரானில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவரான ஆயதுல்லா அலி கமேனி எங்கு ஒளித்திருக்கிறார் என்று தனக்கு தெரியும் எனவும், அவர் எளிதான இலக்கு என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்தார். அவரை கொல்லப் போவதில்லை என்று கூறிய டிரம்ப், கமேனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என எச்சரித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், போர் தொடங்கி விட்டதாக கமேனி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஈரான் பாதுகாப்பு படை அதிகாரி, இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் மற்றும் ஜஃப்பாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலின் பயங்கரவாத ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் என ஈரான் உச்ச தலைவர் கமேனி சூளுரைத்துள்ளார். அதே சமயம், இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் ஈரானுக்கு எதிராக சண்டையிட ஆயத்தமானதால், மத்திய கிழக்கு பகுதிகளில் போர்ப் பதற்றம் நொடிக்கு நொடி அதிகரித்து வருகிறது.
June 18, 2025 11:48 AM IST


