• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

பாக். பிரச்சினையில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றதில்லை: ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதி | India has never accepted mediation PM Modi assures Trump

GenevaTimes by GenevaTimes
June 18, 2025
in இந்தியா
Reading Time: 7 mins read
0
பாக். பிரச்சினையில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றதில்லை: ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதி | India has never accepted mediation PM Modi assures Trump
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புது டெல்லி: பாகிஸ்தானுடனான பிரச்சினைகளில் இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டதில்லை, ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்ற செய்தியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி உறுதியாகத் தெரிவித்தார் என்று இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.

கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடினார். அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த உரையாடலின் போது, ​​இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் விளக்கினார்.

இந்த உரையாடல் குறித்து பேசிய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “சமீபத்திய இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்த விவகாரத்தில் எந்த நேரத்திலும், எந்த மட்டத்திலும், இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அல்லது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அமெரிக்காவின் மத்தியஸ்தம் போன்ற பிரச்சினைகள் விவாதிக்கப்படவில்லை என்பதை பிரதமர் மோடி அதிபர் ட்ரம்ப்பிடம் தெளிவுபடுத்தினார்.

ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது குறித்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில், இரு படைகள் தரப்பிலும் நேரடியாக விவாதிக்கப்பட்டது, மேலும் அது பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் இருந்தது. இந்தியா ஒருபோதும் மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டதில்லை, ஏற்றுக்கொள்ளவில்லை, ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்று ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் இந்தியாவில் முழுமையான அரசியல் ரீதியான ஒருமித்த கருத்து உள்ளது.” என்று கூறினார். மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியின் கருத்துக்களை விரிவாகப் புரிந்துகொண்டதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தியதாகவும் மிஸ்ரி தெரிவித்தார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பகைமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு வழியாக வர்த்தகத்தை பயன்படுத்தியதாகவும், இந்தியா பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டுவர மத்தியஸ்தராக தான் உதவியதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பலமுறை கூறியதைத் தொடர்ந்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

தொடர்ந்து பேசிய விக்ரம் மிஸ்ரி, “ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் மோடிக்கும் அதிபர் ட்ரம்ப்புக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற திட்டமிடப்பட்டது. ஆனால், அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவுக்கு முன்கூட்டியே திரும்ப வேண்டியிருந்தது, இதனால் இந்த சந்திப்பு நடக்கவில்லை. இதன் பிறகு, அதிபர் ட்ரம்பின் வேண்டுகோளின் பேரில், இரு தலைவர்களும் இன்று தொலைபேசியில் பேசினர். ஏப்ரல் 22 அன்று பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் இரங்கல் தெரிவித்து பயங்கரவாதத்திற்கு எதிரான ஆதரவை தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இரு தலைவர்களுக்கும் இடையிலான முதல் உரையாடல் இதுவாகும்.

ஆபரேஷன் சிந்தூர் பற்றி பிரதமர் மோடி அதிபர் ட்ரம்ப்பிடம் விரிவாகப் பேசினார். ஏப்ரல் 22 க்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான தனது உறுதியை இந்தியா முழு உலகிற்கும் தெரிவித்ததாக பிரதமர் மோடி ட்ரம்ப்பிடம் தெளிவாகக் கூறினார். மே 6-7 இரவு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத மறைவிடங்களை மட்டுமே இந்தியா குறிவைத்ததாக பிரதமர் மோடி கூறினார். இந்தியாவின் நடவடிக்கைகள் மிகவும் அளவிடப்பட்டவை, துல்லியமானவை மற்றும் தீவிரப்படுத்தப்படாதவை என்றார்.

மே 9 ஆம் தேதி இரவு, அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் பிரதமர் மோடியை அழைத்தார். பாகிஸ்தான் இந்தியா மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று வான்ஸ் கூறியிருந்தார். இது நடந்தால், பாகிஸ்தானுக்கு இந்தியா இன்னும் பெரிய பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் மோடி தெளிவான வார்த்தைகளில் கூறியிருந்தார். மே 9-10 அன்று இரவு பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்தியா மிகவும் வலுவான பதிலடி கொடுத்தது, இதனால் பாகிஸ்தானின் ராணுவத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டது. அதன் இராணுவ விமான தளங்கள் செயல்பட முடியாத நிலைக்குச் சென்றன. இந்தியாவின் வலுவான பதிலடியால், இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு வலியுறுத்த வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது.

குறிப்பாக, பயங்கரவாதத்தை இந்தியா இனி ஒரு மறைமுகப் போராகக் கருதவில்லை என்றும், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது என்றும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபரிடம் கூறினார்” என்றார்.



Read More

Previous Post

இலஞ்ச – ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார் கெஹெலிய

Next Post

ரோஹித், கோலியின் கலவையே ஷுப்மன் கில்: சொல்கிறார் ஜாஸ் பட்லர் | Shubman Gill is a combination of Rohit and Kohli Says Jos Buttler

Next Post
ரோஹித், கோலியின் கலவையே ஷுப்மன் கில்: சொல்கிறார் ஜாஸ் பட்லர் | Shubman Gill is a combination of Rohit and Kohli Says Jos Buttler

ரோஹித், கோலியின் கலவையே ஷுப்மன் கில்: சொல்கிறார் ஜாஸ் பட்லர் | Shubman Gill is a combination of Rohit and Kohli Says Jos Buttler

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin