கோலாலம்பூர்:
சாலையோரக் கடையில் Pisang goreng tiramisu வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் அதில் பொரித்த பல்லி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பினாங்கு, பாயான் பாருவிலுள்ள லக்சா குவா பெகாட் கடையில் இந்த சம்பவம் நடந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தனது TikTok இல் வெளியிட்ட ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
16 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், பொரித்து கருகிய பல்லி, துண்டாக்கப்பட்ட சீஸ் மற்றும் tiramisu அடுக்குகளில் இருப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
மேலும் அந்தப் பெண் ஒரு முட்கரண்டியைப் பயன்படுத்தி Pisang goreng tiramisu இல் இருந்த அந்த மர்மமான பொருளைத் தூக்கி, தண்ணீருக்கு அடியில் கழுவுகிறார் – பின்னர் ஒரு பல்லியின் தெளிவான வடிவம் அதில் தெரிகிறது.
இது நெட்டிசன்களிடையே பெரும் விமர்சனத்திற்குரியதாக மாறிவருகின்றது. கடைக்காரர்கள் இவ்வாறு பொறுப்பற்று நடந்துகொள்ளுவது மிகவும் ஆபத்தானது என பலரும் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.




