• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ட்ரம்பின் தடையை தகர்த்து அதிகரித்து வரும் இந்திய ஐபோன் ஏற்றுமதி | Breaking Trump blockade and Rising iPhone exports in India Explained

GenevaTimes by GenevaTimes
June 18, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
ட்ரம்பின் தடையை தகர்த்து அதிகரித்து வரும் இந்திய ஐபோன் ஏற்றுமதி | Breaking Trump blockade and Rising iPhone exports in India Explained
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: இந்​தி​யா​வில் தயாரிப்​பு​களை மேற்​கொள்​ளக்​கூ​டாது என அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் ஆப்​பிள் நிறு​வனத்தை கண்​டிப்​புடன் அறி​வுறுத்​திய நிலை​யிலும் இந்​தி​யா​வின் ஐபோன் ஏற்​றுமதி தொடர்ந்து அதி​கரித்து வரு​கிறது. ஆப்​பிள் நிறு​வனத்​தின் ஒப்​பந்த தயாரிப்​பாளர்​கள் இந்​தி​யா​வில் உற்​பத்தி செய்து ஏற்​றுமதி செய்த ஐபோன்​களின் எண்​ணிக்கை 2.04 கோடியை கடந்​துள்​ளது. இது, 2025 ஜனவரி முதல் மே வரையி​லான 5 மாத நில​வரம் மட்​டுமே.

கடந்த 2024-ம் ஆண்டு இதே காலத்​துடன் ஒப்​பிடும்​போது இந்த ஐந்து மாதத்​தில் ஐபோன் ஏற்​றுமதி என்​பது 57% அதி​கம் என சர்​வ​தேச ஆராய்ச்சி நிறு​வன​மான கேனலிஸ் (ஓம்​டி​யா) புள்​ளி​விவரத்​தில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

2025 ஜனவரி-மே வரையி​லான கால​கட்​டத்​தில் ஒட்​டுமொத்த ஐபோன் ஏற்​றும​தி​யில் 77% அமெரிக்கா​வுக்கு மட்​டுமே சென்​றுள்​ளது. கடந்த 2024 முதல் ஐந்து மாதங்​களில் 54% ஐபோன்​கள் ஏற்​றுமதி செய்​யப்​பட்ட நிலை​யில் தற்​போது அதை​விட கூடு​தலாக 23% ஐபோன்​கள் அமெரிக்கா​வுக்கு ஏற்​றும​தி​யாகி​யுள்​ளன.

குறிப்​பாக, கடந்த மே மாதத்​தில் ஒட்​டுமொத்த ஏற்​றும​தி​யில் அமெரிக்​கா​வின் பங்​களிப்பு மட்​டும் 89% அளவுக்கு இருந்​தது என்​பது கவனிக்​கத்​தக்​கது. ஐபோன் ஏற்​றும​தி​யில் அமெரிக்​கா​வின் தேவைக்கு மட்​டுமே அதி​க​மாக முன்​னுரிமை கொடுக்​கப்​பட்​ட​தால் அது ஏனைய நாடு​களின் ஏற்​றும​தி​யில் கணிச​மான தாக்​கத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. அதாவது பிற நாடு​களுக்​கான ஐபோன் ஏற்​றுமதி குறைந்​துள்​ளது.

அதி​லும் குறிப்​பாக, நெதர்​லாந்​து, செக் குடியரசு, இங்​கிலாந்​து, இத்​தாலி போன்ற நாடு​களுக்​கான இந்​தி​யா​வின் ஐபோன் ஏற்​றுமதி தொடர்ச்​சி​யாக சரிவடைந்து வரு​கிறது. அமெரிக்கா​வுக்​கும் சீனா​வுக்​கும் இடையே ஏற்​பட்ட வரி தொடர்​பான வர்த்​தகப் போரையடுத்து சீனா​வின் ஐபோன் ஏற்​றுமதி கடந்த ஏப்​ரலில் வெறும் 9 லட்​ச​மாக குறைந்​தது.

2024 ஏப்​ரலில் 37 லட்​ச​மாக அதி​கரித்து காணப்​பட்ட ஐபோன் ஏற்​றுமதி 4-ல் 1 பங்​காக குறைந்​து​போனதையடுத்து அமெரிக்​கா​வில் ஐபோன்​களுக்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. இந்​தநிலை​யில், அமெரிக்க வாடிக்​கை​யாளர்​களின் ஐபோன் தேவையை இந்​தியா தனது ஏற்​றும​தி​யின் வாயி​லாக ஈடு செய்​தது.

ஆப்​பிள் நிறு​வனத்​துக்​கான ஒப்​பந்த தயாரிப்பு பணி​களை டாடா நிறு​வனம் வேகப்​படுத்​தி​யதே இந்​தி​யா​வின் ஐபோன் ஏற்​றுமதி அதி​கரிப்​புக்கு முக்​கிய காரண​மாக கூறப்​படு​கிறது. இருப்​பினும், இவ்​வாண்​டில் இது​வரை​யில் மொத்த ஐபோன் ஏற்​றும​தி​யில் பாக்​ஸ்​கான் 52% பங்​களிப்​புடன் முதலிடத்தை தக்​க​வைத்​துக்​கொண்​டுள்​ளது. அதேவேளை​யில் ஆப்​பிளின் வியூ​கங்​களுக்கு ஏற்படாடா​வும் உற்​பத்​தியை வேகப்​படுத்​தி​யுள்​ளது. 2024-ம் ஆண்​டில் 13% ஆக இருந்த டாடா​வின் பங்கு தற்​போது 37% ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்​கா​விலேயே உற்​பத்​தியை தொடங்க ஆப்​பிள் நிறு​வனத்​துக்கு அழுத்​தம் கொடுக்​கப்​படு​கிறது. இருந்​தாலும் அங்கு பெரிய அளவில் ஐபோன் உற்​பத்​தியை மேற்​கொள்​ளும்​போது அது பொருளா​தார ரீதி​யாக​வும், செயல்​பாட்டு ரிதீ​யாக​வும் சாதகமற்​ற​தாகவே இருக்​கும்.

ஆப்​பிளின் மேம்​பாடுக்​கான நீண்​ட​கால திட்​டங்​களுக்கு இந்​தி​யா​வின் உற்​பத்தி தளம், உள்​நாட்டு சந்தை தேவை அதி​கரிப்​பு, கொள்கை ஆதர​வு, புவி​சார் அரசி​யல் நடுநிலைமை ஆகிய​வையே அடிப்​படை​யான​தாக இருக்​கும் என்று கிரேஹவுண்ட் ஆய்வு நிறு​வனத்​தின் சிஇஓ சஞ்சித் விர் கேஜியா தெரிவித்துள்ளார்.



Read More

Previous Post

போன் போட்டு கேப்டன் பதவி வேண்டாம் என்றேன்: மனம் திறக்கும் ஜஸ்பிரீத் பும்ரா | Jasprit Bumrah reveals why he declined Team India captaincy

Next Post

“ஈரான் உச்ச தலைவர் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும்…” – அமெரிக்க அதிபர் டிரம்ப்

Next Post
“ஈரான் உச்ச தலைவர் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும்…” – அமெரிக்க அதிபர் டிரம்ப்

“ஈரான் உச்ச தலைவர் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும்...” - அமெரிக்க அதிபர் டிரம்ப்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin