இதன்பின் சட்டமேலவை எம்எல்ஏ, மாநில அமைச்சர், ராஜ்ய சபா எம்பி என பல்வேறு பொறுப்பக்களை வகித்தார். ஒருகட்டத்தில் அமைச்சராக 14 வெவ்வேறு இலாகாக்களை கவனிக்கும் அளவுக்கு மகாராஷ்ட்ரா அரசியலில் முக்கிய புள்ளயாக திகழ்ந்தார். ஆனால், 1998 மற்றும் 2004ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தல்களில் தோல்வியை தழுவிய ஸ்ரீகாந்த் அதே ஆண்டு உயிரிழந்தார். துரதிர்ஷ்டவசமாக ஜூன் 2, 2004 அன்று, தனது 49 வயதில், நாக்பூரிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோந்தாலி அருகே தனது கார் விபத்தில் சிக்கி ஸ்ரீகாந்த் ஜிச்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.


