• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஜல்லிக்கட்டிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெறும் முயற்சி… – முக்கிய ஆவணங்களுடன் பாரிசில் செந்தில் தொண்டமான்

GenevaTimes by GenevaTimes
June 17, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
ஜல்லிக்கட்டிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெறும் முயற்சி… – முக்கிய ஆவணங்களுடன் பாரிசில் செந்தில் தொண்டமான்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 17, 2025 5:20 PM IST

செந்தில் தொண்டமான், ஜல்லிக்கட்டிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெறும் முயற்சியில் பாரிசில் யுனெஸ்கோ தலைமையகத்தில் முக்கிய ஆவணங்களை சமர்ப்பித்தார்.

News18News18
News18

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு உலக பாரம்பரிய மற்றும் கலாசார விழாக்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது தமிழர்களின் பரவலான கருத்தாக இருந்துவருகிறது.

இதை வலியுறுத்தும் வகையில், தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் கௌரவ தலைவர் செந்தில் தொண்டமான், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். அந்த வகையில், யுனெஸ்கோவின் அகவாழ்வியல் மற்றும் காணொளி மரபுகள் பட்டியலில் ஜல்லிக்கட்டு விளையாட்டை சேர்க்கும் வகையில் அங்கீகாரம் பெறுவதற்காக பாரிசில் உள்ள யுனெஸ்கோ தலைமையகத்திற்கே சென்று பல முக்கியமான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டு வருகிறார்.

முதன்மையான இந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பொருட்டு செந்தில் தொண்டமான், யுனெஸ்கோவின் ஆசியா-பசிபிக் பிராந்திய இயக்குனராக செயல்படும் ஹிமால்சுலி குரங்-வை நேரில் சந்தித்துள்ளார். அந்தச் சந்திப்பில், ஜல்லிக்கட்டின் பாரம்பரியத்தையும், அதன் சமூக-பண்பாட்டு மதிப்புக்களையும் விளக்கும் முக்கிய ஆவணங்கள் மற்றும் தரவுகளை சமர்ப்பித்துள்ளார்.

யுனெஸ்கோவின் அதிகாரிகள்  அவற்றைப் பெற்றுக் கொண்டு, பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டை யுனெஸ்கோவின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்காக செந்தில் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது, ஜல்லிக்கட்டின் முக்கியத்துவம், அதில் கிராமப்புற வாழ்வியல் மற்றும் இளம் தலைமுறையின் ஈடுபாடு உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் தெளிவாக விவரிக்கப்பட்டன. ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம் மட்டுமல்ல; அது சமுதாய ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் சிறப்புமிக்க வீர விளையாட்டு என்பதைத் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.

அவருடைய இந்த முயற்சி, தமிழர் கலாச்சார வீர மரபை உலக அரங்கில் பதிவு செய்யும் ஒரு மிக முக்கியமான முயற்சியாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் மத்தியில் மதிப்பிடப்பட்டுள்ளது.

தனது இந்த முயற்சியால், “தமிழர்களின் வாழ்க்கை முறையோடு இணைந்துள்ள ஜல்லிக்கட்டின் பெருமிதம், உலக பாரம்பரியத்தின் ஒரு பகுதி என அடையாளம் காணப்படும் நாள் விரைவில் வரும்” என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

June 17, 2025 5:20 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

ஜல்லிக்கட்டிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெறும் முயற்சி… – முக்கிய ஆவணங்களுடன் பாரிசில் செந்தில் தொண்டமான்

Read More

Previous Post

தமிழகத்தில் பால் கையாளும் திறனை தினமும் 70 லட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை: அமைச்சர் தகவல் | Minister Mano Thangaraj press meet in salem

Next Post

ஏர் இந்தியா விபத்து: காப்பீடு மூலம் Rs.4,000 கோடி கிடைக்கலாம் | Makkal Osai

Next Post
ஏர் இந்தியா விபத்து: காப்பீடு மூலம் Rs.4,000 கோடி கிடைக்கலாம் | Makkal Osai

ஏர் இந்தியா விபத்து: காப்பீடு மூலம் Rs.4,000 கோடி கிடைக்கலாம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin