Last Updated:
இஸ்ரேல் – ஈரான் இடையேயான சண்டை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தெஹ்ரானை விட்டு மக்கள் வெளியேற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில், ஈரானின் முக்கிய தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இந்த தாக்குதல் சுமார் ஐந்து நாட்களாக நீடிக்கும் நிலையில், நேற்று இந்த தாக்குதல் உச்சக்கட்டத்தை எட்டியது. தெஹ்ரானில் நடைபெற்ற தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதிகளில் ஒருவரான அலி சட்மானி கொல்லப்பட்டார் என இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
ஏற்கனவே தளபதியாக இருந்த கோலமலி ரஷித் கொல்லப்பட்ட நிலையில், கடந்த ஜூன் 13ஆம் தேதி அலி சட்மானி தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தான் அவர் கொல்லப்பட்டிருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையேயான சண்டை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், தெஹ்ரானை விட்டு மக்கள் வெளியேற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். மேலும் ஈரானில் உள்ள சுமார் 6000 இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வர வெளியுறவு அமைச்சகம் திட்டமிட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.
June 17, 2025 1:32 PM IST


