• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்திய மாணவர்கள் வெளியேற ஈரான் தரைவழி எல்லை திறப்பு | Iran opens land border for Indian students to leave

GenevaTimes by GenevaTimes
June 17, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
இந்திய மாணவர்கள் வெளியேற ஈரான் தரைவழி எல்லை திறப்பு | Iran opens land border for Indian students to leave
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டெஹ்ரான்: இந்​தி​யா​வின் கோரிக்​கையை ஏற்று அங்கு வசிக்​கும் இந்​திய மாணவர்​கள் வெளி​யேற தரைவழி எல்​லைகளை ஈரான் அரசு திறந்​துள்​ளது. ஈரான் – இஸ்​ரேல் இடையே தாக்​குதல் தீவிரமடைந்துள்ளது. இந்​நிலை​யில், ஈரானில் தற்​போது 4,000-க்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள் வசிக்​கின்​றனர். அவர்​களில் பாதிக்​கும் மேற்​பட்​டோர் மாணவர்​கள். ஈரானில் உள்ள பெரும்​பாலான இந்​திய மாணவர்​கள் ஜம்​மு-​காஷ்மீரை சேர்ந்​தவர்​கள்.

இந்​நிலை​யில் ஈரானில் படிக்​கும் மாணவர்​களை பாது​காப்​பாக வெளி​யேற்ற உதவு​மாறு ஈரான் அரசை, இந்​திய அரசு கேட்​டுக் கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில் இந்​திய அரசு கேட்​டுக் கொண்​டதற்கு இணங்க, தங்​களது தரைவழி எல்​லைகளை திறந்​துள்​ள​தாக​வும், அதன் வழி​யாக மாணவர்​கள் பாது​காப்​பாக வெளி​யேறலாம் என்​றும் ஈரான் அரசு நேற்று அறி​வித்​துள்​ளது.

ஈரான் அரசு வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், “ஈரான் மீதான வான்​வழி மூடப்​பட்​டிருந்​தா​லும், பொது​மக்​கள் பாது​காப்​பாக நாட்டை விட்டு வெளி​யேறும் வகை​யில் அனைத்து தரைவழி எல்​லைகளும் திறந்​திருக்​கும். மாணவர்​கள் பாது​காப்​பாக செல்​லலாம்” என்று கூறப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யத் தூதரகம் ஏற்​பாடு: இந்​நிலை​யில், அங்​குள்ள இந்​தி​யர்​களை ஈரானுக்​குள்​ளேயே பாது​காப்​பான இடங்​களுக்கு வெளி​யேற்​றும் பணி​களை இந்​திய தூதரகம் தொடங்​கி​யுள்​ளது. மேலும், விரை​வில் அவர்​களை இந்​தி​யா​வுக்கு திருப்பி அழைத்​து​வரும் நடவடிக்​கைகள் குறித்​தும் ஆய்வு செய்​யத் தொடங்​கி​யுள்​ள​தாக தூதரகம் தெரி​வித்​துள்​ளது.

3 நாட்கள் தூங்கவில்லை: ஈரானில் சுமார் 1,500-க்​கும் மேற்​பட்ட இந்​திய மாணவர்​கள் கல்வி பயில்​கின்​றனர். ஈரான் தலைநகர் தெஹ்​ரானை குறி​வைத்து இஸ்​ரேல் போர் விமானங்​கள் கடந்த சில நாட்​களாக குண்​டுமழை பொழிந்து வரு​கின்றன. இதுகுறித்து 3-ம் ஆண்டு எம்​பிபிஎஸ் மாணவர் இம்​தி​சால் மொகிதீன் கூறும்​போது, “தெஹ்​ரானில் உள்ள மருத்​து​வக் கல்​லூரி​யில் சுமார் 350 இந்​திய மாணவ, மாண​வியர் எம்​பிபிஎஸ் படித்து வரு​கின்​றனர். எங்​களது விடுதி அமைந்​துள்ள இடத்​துக்கு அரு​கில் குண்​டு​கள் வீசப்​படு​கின்​றன.

கடந்த 3 நாட்​களாக நாங்​கள் தூங்​க​வில்​லை. விடு​தி​யின் அடித்​தளத்​தில் தஞ்​சமடைந்து உள்​ளோம். மிகுந்த அச்​சத்​துடன் வாழ்ந்து வரு​கிறோம். மத்​திய அரசு எங்​களை பத்​திர​மாக மீட்க வேண்​டும்” என்று தெரி​வித்​தார். இஸ்​ரேல் நாட்​டில் சுமார் 32,000-க்​கும் மேற்​பட்ட இந்​தி​யர்​கள் வசிக்​கின்​றனர். அவர்​களில் பெரும்​பாலானோர் தொழிலா​ளர்​கள் ஆவர். அவர்​கள் பாது​காப்​பான இடங்​களில் தங்க வைக்​கப்​பட்டு இருப்​ப​தாக இஸ்​ரேல் அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.



Read More

Previous Post

‘WTC இறுதி தோல்விக்குப் பிறகு டிராவிஸ் ஹெட் உடைந்துவிட்டார்’-சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் வியான் முல்டர் தகவல்

Next Post

“வடக்கிலுள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து வதந்தி”

Next Post
“வடக்கிலுள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து வதந்தி”

“வடக்கிலுள்ள மனிதப் புதைகுழிகள் குறித்து வதந்தி”

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin