ஈரான் அணுசக்தியை உருவாக்குவதாக குற்றம்சாட்டும் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதல் நடத்திவருகிறது. அதற்கு ஈரான் ராணும் பதிலடி கொடுக்கிறது. இருதரப்பிலிருந்தும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. புலம்பெயர்தலும் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானியர்கள் தெஹ்ரானை விட்டு வெளியேற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். ட்ரம்ப் நேற்று கனடாவில் உச்சி மாநாட்டின் குழுவை சந்தித்தார். அப்போது, அணு ஆயுத வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை ஈரான் நிராகரித்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவரின் சமூக ஊடகப் பக்கத்தில், “ஈரான் கையெழுத்திடும்படி நான் சொன்ன “ஒப்பந்தத்தில்’ கையெழுத்திட்டிருக்க வேண்டும். என்ன அவமானம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், ட்ரம்ப்பின் ஆரம்பகால போர் நிறுத்த ஒப்பந்தம் நேர்மறையானது, இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வதே உடனடி நோக்கமாக இருந்தது. அதைத் தொடர்ந்து, ஈரானிலும் – இஸ்ரேலிலும் சைரன்கள் அலறிக்கொண்டே இருக்கிறது.

