• Login
Monday, April 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் அக்டோபர் 5-ல் மோதல் | ICC Women ODI World Cup 2025 India vs Pakistan on October 5

GenevaTimes by GenevaTimes
June 17, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் அக்டோபர் 5-ல் மோதல் | ICC Women ODI World Cup 2025 India vs Pakistan on October 5
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் இலங்கையில் அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான முழு அட்டவணையை தற்போது ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் அணி கலந்து கொள்ளும் போட்டிகள் அனைத்தும் இலங்கையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013-ம் ஆண்டுக்கு பின்னர் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடர் ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

செப்டம்பர் 30-ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் இந்தியா, இலங்கையுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து 26-ம் தேதி இதே மைதானத்தில் வங்கதேச அணியுடனும் மோதுகிறது இந்திய அணி. இதையடுத்து அக்டோபர் 5-ம் தேதி கொழும்பு நகரில் பாகிஸ்தானை சந்திக்கிறது இந்திய அணி.

இதன் பின்னர் இந்திய அணி அக்டோபர் 9-ம் தேதியும் தென் ஆப்பிரிக்காவுடனும், அக்டோர் 12-ம் தேதி நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடனும் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த இரு ஆட்டங்களும் விசாகப்பட்டிணத்தில் நடைபெறுகின்றன.

தொடர்ந்து அக்டோபர் 19-ம் தேதி இந்தூரில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்துடனும், 23-ம் தேதி குவாஹாட்டியில் நடைபெறும் ஆட்டத்தில் நியூஸிலாந்துடனும் இந்திய அணி மோதுகிறது.

நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா தனது முதல் ஆட்டத்தில் அக்டோபர் 1-ம் தேதி நியூஸிலாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இந்தூரில் நடைபெறுகிறது. முதல் அரை இறுதி போட்டி அக்டோபர் 29-ம் தேதி குவாஹாட்டி அல்லது கொழும்பு நகரில் நடைபெறும். 2-வது அரை இறுதி 30-ம் தேதி பெங்களூரு அல்லது கொழும்பு நகரில் நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 2-ம் தேதி பெங்களூரு அல்லது கொழும்பு நகரில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி இருந்தால் மட்டுமே கொழும்பு நகரில் போட்டி நடைபெறும். இல்லையென்றால் இந்தியாவிலேயே நடத்தப்படும்.



Read More

Previous Post

வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலை குறைவு.. ஜூன் 16, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ!

Next Post

யுபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்? வெளியான சூப்பர் நியூஸ்

Next Post
யுபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்? வெளியான சூப்பர் நியூஸ்

யுபிஐ மூலம் பணம் பரிவர்த்தனை செய்பவரா நீங்கள்? வெளியான சூப்பர் நியூஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin