Last Updated:
சமீபத்தில் ஏர் இந்தியா விமானங்களில் தொடர்ந்து கோளாறுகள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக விமானங்களில் கோளாறு ஏற்படுவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று காலை மீண்டும் ஒரு ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 12ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற விமான விபத்தில் 241 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் உலகையே உலுக்கிய நிலையில், அந்த வடு மறைவதற்குள் உத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஹஜ் பயணிகளுடன் லக்னோ வந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே ஹாங்காங்கிலிருந்து நேற்று டெல்லி வர இருந்த ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. நடுவானில் பறந்தபோது விமானி, தொழில்நுட்பக் கோளாறை கண்டறிந்த நிலையில், மீண்டும் விமானத்தை ஹாங்காங்கிற்கு திருப்பி பயணிகளை காப்பாற்றினார்.
இந்த நிலையில், இன்று சான்பிரான்சிஸ்கோவில் இருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் விமானத்தின் என்ஜினில் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், நள்ளிரவு 12.45 மணிக்கு கொல்கத்தாவிற்கு வந்த விமானத்தை காலை 5.20 மணி வரை இயக்க முடியாத சூழல் உருவானது.
இதையடுத்து பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுக்க ஏர் இந்தியா நிறுவனம் உறுதியளித்துள்ளது. சமீபத்தில் ஏர் இந்தியா விமானங்களில் தொடர்ந்து பழுது ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மீண்டும் என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Kolkata,West Bengal
June 17, 2025 7:45 AM IST


