Last Updated:
பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் அதிபர் நிகோஸ் “தி ஆர்டர் ஆஃப் மகரியோஸ்-3” உயரிய விருது வழங்கினார். மோடி, இந்த விருது 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை சேர்ப்பதாக கூறினார்.
அரசு முறை பயணமாக சைப்ரஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
தி ஆர்டர் ஆஃப் மகரியோஸ்-3 என்ற உயரிய விருதை பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டு அதிபர் நிகோஸ் அளித்தார். சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது பெற்றது பற்றி பெருமிதம் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்த விருது தனக்கானது மட்டுமல்ல என்றும், 140 கோடி இந்தியர்களுக்கும் பெருமை சேர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்த விருதை இந்தியா-சைப்ரஸ் நாட்டு நல்லுறவுக்கு அர்ப்பணிப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். பின்னர் நடந்த இந்தியா-சைப்ரஸ் நாட்டு அதிகாரிகள் மட்டத்திலான கூட்டத்தில் இருநாட்டு தலைவர்கள் பங்கேற்று நட்புறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தனர்.
June 16, 2025 10:21 PM IST


