Last Updated:
கேமரூன் கிரீன் இறுதிப்போட்டியில் மொத்தமே 5 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்கள் எடுத்திருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர்களின் மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
மிகவும் வலுவான பௌலிங் மற்றும் பேட்டிங் லைன் அப்பை கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா அணியின் டெம்பா பவுமா மற்றும் எய்டான் மார்க்ரம் ஆகியோர் அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளனர்.
முதன்முறையாக தென்னாப்பிரிக்க அணி ஐசிசி கோப்பை தொடரை வென்று ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்நிலையில் தோல்வி குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கூறியதாவது: “சமீபகாலமாக ஹேசல்வுட் உடல் தகுதி கேள்விக்குறியாகி வருகிறது. அவர் அடிக்கடி காயத்தில் சிக்குகிறார்.
வேகப்பந்து வீச்சாளரான அவர் தேசிய அணிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஐபிஎல் தொடருக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார். கேமரூன் கிரீன் இறுதிப்போட்டியில் மொத்தமே 5 பந்துகளை எதிர்கொண்டு 4 ரன்கள் எடுத்திருக்கிறார்.
மார்னஸ் லபுஷேன் சரியாக விளையாடாமல் இருப்பதும் ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கில் ரன்கள் அதிகம் குவிக்காததற்கு முக்கிய காரணம். இதேபோன்று ஸ்டீவன் ஸ்மித்தும் எதிர்பார்த்த ரன்கள் இந்த போட்டியில் குவிக்கவில்லை” என்று மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
மிட்செல் ஜான்சன் விமர்சித்துள்ள ஜோஷ் ஹேசல்வுட் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
June 15, 2025 8:03 PM IST


