• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

‘சோக்கர்ஸ்’ என்றது காதில் விழுந்தது… – தெம்பா பவுமா கூறியது என்ன? | south africa captain Temba Bavuma about australia chokers sledge

GenevaTimes by GenevaTimes
June 15, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
‘சோக்கர்ஸ்’ என்றது காதில் விழுந்தது… – தெம்பா பவுமா கூறியது என்ன? | south africa captain Temba Bavuma about australia chokers sledge
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆட்டத்தின் இடையே ‘சோக்கர்ஸ்’ என்று ஆஸ்திரேலிய வீரர் ஒருவர் ஸ்லெட்ஜிங் செய்தது தன் காதில் விழுந்தது என்று தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா கூறியுள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது தென் ஆப்பிரிக்க அணி. அந்த அணி கடைசியாக 1998-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வென்றிருந்தது. இந்த 27 வருட காலங்களில் பல ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்க அணி நாக்-அவுட் சுற்றுகளில் பரிதாபமாக தோல்வியை சந்தித்து வெளியேறியது நினைவுகூரத்தக்கது.

ஆஸ்திரேலிய அணி சாண்ட் பேப்பர் அத்தியாயத்துக்குப் பிறகே எதிரணியினரை மேலதிகமாக ஸ்லெட்ஜிங் அல்லது நட்பு ரீதியான கேலி, வசை போன்றவற்றை ஏறக்குறைய இல்லாமலே செய்துவிட்டனர். குறிப்பாக, கம்மின்ஸ் கேப்டன்சியில் இந்தக் கொள்கையை ஆஸ்திரேலிய அணி தீவிரமாகக் கடைபிடிக்க ஸ்லெட்ஜிங் செய்வதில் நிபுணரான ஸ்டீவ் ஸ்மித் போன்றோரே வாயை மூடிக்கொண்டுதான் ஆடுகின்றனர். ஆனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியில் கடைசி நாளில் லேசாக ஸ்லெட்ஜ் செய்தனர் என்கிறார் வெற்றி கேப்டன் தெம்பா பவுமா.

ஒரு வீரர் (யார் என்று பெயர் சொல்லவில்லை), தென் ஆப்பிரிக்க அணி கொலாப்ஸ் ஆகும் என்று தங்கள் மனத்துக்குள் புகுந்து கலைக்க முற்பட்ட முயற்சியை தெம்பா பவுமா அம்பலப்படுத்தினார். ஆனால், அது மார்க்ரம் மற்றும் தன் உறுதியை மேலும் வலுவாக்கியது என்கிறார் தெம்பா பவுமா. அதாவது, ஒவ்வொரு ஓவர் முடிவிலும் மார்க்ரம் தன்னிடம் வந்து விடக்கூடாது, அவர்களுக்கு ஒன்றையும் நாம் விட்டு விடக்கூடாது என்று கூறிக்கொண்டே இருந்ததாக பவுமா பேட்டி ஒன்றில் கூறினார்.

4-வது நாள் ஆட்டத்தில் 69 ரன்கள் வெற்றிக்குத் தேவை; 8 விக்கெட்டுகள் கையில் இருந்தன. மார்க்ரம் வெற்றியை உறுதி செய்யும் வரை கிரீசில் இருந்து ஆகச் சிறந்த 136 ரன்களை எடுத்து பிரமாதமான வெற்றியைச் சாத்தியமாக்கினார்.

தெம்பா பவுமா கூறும்போது, “ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக ஆடுவது என்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது. வழக்கமான ஆஸ்திரேலியா போல் இல்லை. அவர்கள் களத்தில் அதிகம் பேசுவதில்லை. ஆனால், உடல்மொழியில் ஆட்டத்தில் ஆக்ரோஷமாக செயல்படுகின்றனர். நிச்சயம் முன்பு போல் பேசிக்கொண்டே இருப்பதில்லை.

ஆனால் 4-ம் நாள் ஆட்டத்தில் ‘சோக்கர்ஸ்’ (Chokers) என்று எங்கள் மேல் சுமத்தப்பட்ட அடையாளம் மேலே வந்தது. ஓர் ஆஸ்திரேலிய வீரர் நாங்கள் 8 விக்கெட்டுகளை 60 ரன்களுக்குள் இழந்து தோற்போம் என்பதைக் குறிக்க அந்த வார்த்தையைப் பயன்படுத்தியது எங்கள் காதில் விழுந்தது. நிச்சயமாக அது என் காதுகளில் விழுந்தது. ஆனால், எய்டன் மார்க்ரம் ஓவருக்கு ஓவர் என்னிடம் வந்து நாம் அவர்களுக்கு இந்த முறை எதையும் கொடுத்து விடக்கூடாது என்று உறுதியை வலியுறுத்தி வந்தார்.

அவர்கள் நிறைய பேசவில்லை. ஆனால், ஆங்காங்கே ஒரு சில வார்த்தைகள் காதில் விழவே செய்தன. சோக்கர்ஸ் என்பதை இனி ஒரு போதும் கேட்க விரும்பவில்லை. ஆனால் அது ஓர் உத்வேகமாக அமைந்து வெற்றியை சாதிக்கச் செய்து, அந்த அடையாளத்தை முறியடித்தது உண்மையில் பெரிய விஷயமே” என்றார்.

‘சோக்கர்ஸ்’ – மிக முக்கியமான தருணத்திலோ, போட்டியில் ஏற்படும் திடீர் நெருக்கடியையோ சமாளிக்க முடியாமல் தோல்வி அடைபவர்களை ஆங்கிலத்தில் கிண்டலாக அழைக்கப்படும் சொல்தான் ‘சோக்கர்ஸ்’ என்பது குறிப்பிடத்தகக்து.

ஐசிசி தொடர்களில் முக்கியமான கட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை சந்தித்து வெளியேறுவதால் அந்த அணி மீது ‘சோக்கர்ஸ்’ என்ற முத்திரை குத்தப்பட்டது. கால் நூற்றாண்டை கடந்து இந்த முத்திரையை தற்போது தெம்பா பவுமா தலைமையிலான போராட்ட குணம் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி உடைத்தெறிந்துள்ளது கவனிக்கத்தக்கது.



Read More

Previous Post

Petrol Diesel Price | இஸ்ரேல் – ஈரான் மோதல்.. பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்?

Next Post

இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் | Israel Iran conflict Risk of rising crude oil prices

Next Post
இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் | Israel Iran conflict Risk of rising crude oil prices

இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் | Israel Iran conflict Risk of rising crude oil prices

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin