• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

யுடிடி சீசன் 6: இறுதிப் போட்டியில் நுழைந்தது யு மும்பா; நாளை ஜெய்ப்பூர் பேட்ரியாஸுடன் பலப்பரீட்சை | UTT Season 6: U Mumba enters finals

GenevaTimes by GenevaTimes
June 14, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
யுடிடி சீசன் 6: இறுதிப் போட்டியில் நுழைந்தது யு மும்பா; நாளை ஜெய்ப்பூர் பேட்ரியாஸுடன் பலப்பரீட்சை | UTT Season 6: U Mumba enters finals
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் (யுடிடி) சீசன் 6-ல் இன்று அகமதாபாத்தில் நடைபெற்ற 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் – யு மும்பா டிடி அணிகள் மோதின.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் லிலியன் பார்டெட் (பிரான்ஸ்), டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் இந்திய நட்சத்திரமான ஹர்மீத் தேசாயை எதிர்த்து விளையாடினார். இதில் கோவா அணியின் ஹர்மீத் தேசாய் 3-0 (11-8, 11-4, 11-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று முழுமையாக 3 புள்ளிகளை அள்ளினார்.

2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் பெர்னாடெட்சோக்ஸ், டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ஜெங் ஜியானுடன் (சிங்கப்பூர்) மோதினார். இதில் மும்பா அணியின் லிலியன் பார்டெட் 2-1 (11-5. 11-9, 7-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சாக்ஸ் (ருமேனியா), ஆகாஷ் பால் ஜோடியானது, டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் ஜெங் ஜியான் (சிங்கப்பூர்), ஹர்மீத் தேசாய் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் யு மும்பா அணியின் பெர்னாடெட் சாக்ஸ், ஆகாஷ் பால் ஜோடி 2-1 (11-8, 8-11, 11-9) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

இதனால் யு மும்பா அணி 4-5 என நெருங்கி வந்தது. 4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் அபிநந்த் பிபி, டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் விட்டோர் இஷியுடன் (பிரேசில்) மோதினார். இதில் முதல் இரு செட்களையும் விட்டோர் இஷி 11-6, 11-4 என கைப்பற்ற டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணி 7-4 என முன்னிலை பெற்றது. இதனால் கடைசி செட் ஆட்டம் பரபரப்பானது. முதலில் பின்தங்கிய அபிநந்த் அதன் பின்னர் மீண்டு வந்து 6-6 என சமநிலையை எட்டினார்.

ஆனால் அதன் பின்னர் விட்டோர் இஷி தொடர்ச்சியாக 3 புள்ளிகளை சேர்த்து 9-6 என முன்னிலை வகித்தார். ஆனால் அபினந்த் போராடி 8-9 என நெருங்கினார். அப்போது விட்டோர் இஷி சர்வீஸில் தவறு செய்ய 9-9 என சமநிலை உருவானது. இதன் பின்னர் உத்வேகம் பெற்ற அபினந்த் கடைசி செட்டை 11-9 என தன்வசப்படுத்தினார்.

எனினும் விட்டோர் இஷி 2-1 ( 11-6, 11-4, 9-11) என வெற்றி பெற்றார். இந்த வெற்றியால் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணி 7-5 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் யு மும்பா அணியின் யஷஸ்வினி கோர்படே, டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியின் கிருத்விகா சின்ஹா ராயுடன் மோதினார்.

இதில் முதல் செட்டை யஷஸ்வினி கோர்படே 11-9 என கைப்பற்றினார். இதனால் யு மும்பா அணி 6-7 என நெருங்கியது. அடுத்த செட்டையும் யஷஸ்வினி கோர்படே 11-9 என கைப்பற்ற ஆட்டம் 7-7 என சமநிலையை அடைந்தது. பரபரப்பாக அமைந்த கடைசி செட்டில் யஷஸ்வினி கோர்படே தொடக்கத்தில் 4-1 என முன்னிலை வகித்தார். தொடர்ந்து அபாரமாக விளையடிய யஷஸ்வினி கோர்படே 11-10 என வெற்றியை வசப்படுத்தினார்.

முடிவில் யஷஸ்வினி கோர்படே 3-0 (11-9, 11-9, 11-10) என வெற்றி பெற்று அசத்தினார். இதனால் யு மும்பா அணி 8-7 என்ற கணக்கில் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

யுடிடி சீசன் 6-ல் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸுடன் யு மும்பா அணி பலப்பரீட்சை நடத்துகிறது.



Read More

Previous Post

ஃபரீதாபாத்: 2 சிறுவா்களைக் கடத்திய நபா் கைது

Next Post

இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: டெல் அவிவ் ராணுவ தலைமையகம் தகர்க்கப்பட்டது – பாதிப்புகள் என்ன? | Iran launches missile attacks on Israeli cities

Next Post
இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: டெல் அவிவ் ராணுவ தலைமையகம் தகர்க்கப்பட்டது – பாதிப்புகள் என்ன? | Iran launches missile attacks on Israeli cities

இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: டெல் அவிவ் ராணுவ தலைமையகம் தகர்க்கப்பட்டது - பாதிப்புகள் என்ன? | Iran launches missile attacks on Israeli cities

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin