• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

WTC: 27 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்க அணி.. உலகம் முழுவதும் ரீல்ஸ் வெளியிட்டு கொண்டாடும் ரசிகர்கள்!

GenevaTimes by GenevaTimes
June 14, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
WTC: 27 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்க அணி.. உலகம் முழுவதும் ரீல்ஸ் வெளியிட்டு கொண்டாடும் ரசிகர்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 14, 2025 6:56 PM IST

தென்னாப்பிரிக்கா 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஐசிசி கோப்பையை வென்று வரலாறு படைத்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்களால் தோற்கடித்தது.

News18News18
News18

27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் ஐசிசி கோப்பையை வென்று வரலாறு படைத்திருக்கிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்களால் தோற்கடித்தது.

27 ஆண்டுகளுக்குப் பிறகான வரலாற்று வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி சாதனை படைத்துள்ளது. தென்னாப்பரிக்க அணிக்கு தொடக்கம் முதலே ஆதரவுகள் இருந்து வந்தன. இறுதிப்போட்டி தொடங்கியது முதலேயே பலர் வக்கா வக்கா பாடலுக்கு ரீல்ஸ் செய்து பகிர தொடங்கினர்.

2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் ஃபிபா உலக கோப்பை நடந்த போது அதன் அதிகாரப்பூர்வ பாடலாக இது உருவாக்கப்பட்டது. கொலம்பியன் பாடகி ஷகிரா பாடிய இந்த பாடலில் திஸ் டைம் ஃபார் ஆப்ரிக்கா என்ற வரிகள் உள்ளன.

கிரிக்கெட்டே பார்க்காத பலரும் டிரெண்டிங்கில் இணைய இந்த ரீல்ஸ்-ஐ செய்து பகிர்ந்து வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி கடந்த 11ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 212 ரன்களுக்கும், தென்னாப்பிரிக்கா 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன.

விறுவிறுப்பாக நடந்த 3 ஆம் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 2-ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 202 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இலக்கை நோக்கி ஆடிய தென்னாப்பிரிக்கா வீரர்களில், ரியான் ரிக்கில்டன் 6 ரன்களிலும், வியான் முல்டர் 27 ரன்களிலும் பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கிய எய்டன் மார்க்ரம் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா ஆகியோர் நங்கூரமிட்டு ஆஸ்திரேலிய வீரர்கள் வீசிய பந்தை பதம் பார்த்தனர். பொறுப்புடன் ஆடி வரும் மார்க்ரம் 156 பந்துகளில் சதம் விளாசிய நிலையில், கேப்டன் பவுமாவும் அரைசதம் கடந்தார்.

3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்துள்ளது. மார்க்ரம் 102 ரன்களுடனும், பவுமா 65 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரைக் கைப்பற்றுமா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது நடந்திருக்கிறது.

4ம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய நிலையில் 4 ரன்கள் சேர்ப்பதற்குள் பவுமா தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதன் பின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 8 ரன்களிலும், மார்க்ரம் 136 ரன்களுக்கும் அவுட் ஆகியதால் 5 விக்கெட் சரிந்தது. எனினும் டேவிட் பெடிங்ஹாம் மற்றும் கைல் வெர்ரெய்ன் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். 83.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது தென்னாப்பிரிக்கா.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 14, 2025 6:56 PM IST

தமிழ் செய்திகள்/விளையாட்டு/

WTC: 27 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாறு படைத்த தென் ஆப்பிரிக்க அணி.. உலகம் முழுவதும் ரீல்ஸ் வெளியிட்டு கொண்டாடும் ரசிகர்கள்!

Read More

Previous Post

வி.சத்திரப்பட்டி காவல் நிலைய தாக்குதலுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

Next Post

3 நாடுகள்… 5 நாட்கள்… பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு விசிட்… முக்கியத்துவம் என்ன?

Next Post
3 நாடுகள்… 5 நாட்கள்… பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு விசிட்… முக்கியத்துவம் என்ன?

3 நாடுகள்... 5 நாட்கள்... பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாடு விசிட்... முக்கியத்துவம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin