• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

யுடிடி சீசன் 6: இறுதிப் போட்டியில் கால் பதித்தது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி! | utt season 6 jaipur team enters final by beating delhi in semi

GenevaTimes by GenevaTimes
June 14, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
யுடிடி சீசன் 6: இறுதிப் போட்டியில் கால் பதித்தது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி! | utt season 6 jaipur team enters final by beating delhi in semi
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: யுடிடி (அல்டிமேட் டேபிள் டென்னிஸ்) சீசன் 6-ல் நேற்று (ஜூன் 13) அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் அரை இறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி டிடிசி – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியின் க்யூக் இசாக் (சிங்கப்பூர்), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜாவுடன் (அமெரிக்கா) மோதினார். இதில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் கனக் ஜா 2-1 (7-11, 11-10, 11-3) என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

2-வது நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியின் மரியா சியாவோ (ஸ்பெயின்), ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்டுடன் (நெதர்லாந்து) பலப்பரீட்சை நடத்தினார். இதில் டெல்லி தபாங் அணியின் மரியா சியாவோ 2-1 (6-11,11-6, 11-8) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தார். இதனால் இரு அணிகள் இடையிலான மோதல் 3-3 என சமநிலையை எட்டியது.

3-வது நடைபெற்ற கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியின் மரியா சியாவோ, சத்தியன் ஞானசேகரன் ஜோடியானது ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் பிரிட் ஈர்லாண்ட், ஜீத் சந்திரா ஜோடியுடன் மோதியது. இதில் தபாங் டெல்லி அணியின் மரியா சியாவோ, சத்தியன் ஞானசேகரன் ஜோடி 2-1 (8-11, 11-9, 11-10) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

4-வது நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியின் சத்தியன் ஞானசேகரன், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் யஷான்ஷ் மாலிக்குடன் மோதினார். இதில் யஷான்ஷ் மாலிக் 2-1 (11-10, 11-9, 6-11) என்ற கணக்கில் சத்தியனை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார்.

இதனால் ஆட்டம் 6-6 என சமநிலையை எட்டியது. வெற்றியை தீர்மானித்த கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில் தபாங் டெல்லி அணியின் தியா சித்தலே, ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணியின் ஸ்ரீஜா அகுலாவுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில் முதல் செட்டை ஸ்ரீஜா அகுலாவும் (11-9), 2-வது செட்டை தியா சித்தலேவும்(11-6) ஆட்டம் 7-7 என சமநிலையை அடைந்தது. இதனால் ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது. இதில் ஸ்ரீஜா அகுலா 11-9 என வெற்றியை வசப்படுத்தினார். முடிவில் அவர் 2-1 (11-6, 6-11, 11-9) என்ற கணக்கில் தியா சித்தலேவை தோற்கடித்தார்.

ஒட்டுமொத்தமாக இந்த மோதலில் ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணி 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

யுடிடி சீசன் 6-ல் இன்று (ஜூன் 14) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான டெம்போ கோவா சாலஞ்சர்ஸ், யு மும்பா அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.



Read More

Previous Post

’கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவது தான் திமுகவின் சமூக நீதியா?’அன்புமணி ராமதாஸ் கேள்வி

Next Post

Today Gold Rate | தங்கம் விலையில் தொடரும் ஷாக்.. வார இறுதியில் மீண்டும் எகிறியது.. இன்றைய ரேட் என்ன?

Next Post
Today Gold Rate | தங்கம் விலையில் தொடரும் ஷாக்.. வார இறுதியில் மீண்டும் எகிறியது.. இன்றைய ரேட் என்ன?

Today Gold Rate | தங்கம் விலையில் தொடரும் ஷாக்.. வார இறுதியில் மீண்டும் எகிறியது.. இன்றைய ரேட் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin